அங்கீகரிக்கப்படாத உத்தியோகபூர்வமற்ற

சந்தை இறக்குமதிகள் இலங்கையின் வரி வருவாயில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்துகின்றன. 

குறைந்த விலையால் நுகர்வோரிடையே ஏற்படும் மயக்கம், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவற்றை ஆபத்தில் தள்ளும் ஒரு சிக்கலான நிலையை உருவாக்குகிறது.
 
வர்த்தக முத்திரை உரிமையாளர்களின் அனுமதியின்றி இறக்குமதி செய்யப்படும் தயாரிப்புகளை உத்தியோகபூர்வமற்ற சந்தை அல்லது இணையான இறக்குமதி என அழைக்கப்படுகிறது. இது வரி வருமானம் மற்றும் அந்நியச் செலாவணியில் கணிசமான இழப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த பரிவர்த்தனைகள் இரகசியமாக இடம்பெறுவதன் காரணமாக, இதன் நிதி தாக்கத்தை மதிப்பீடு செய்ய முடியாத வகையில், இலங்கையின் பொருளாதார நிலையை மேலும் மோசமாக்கும் வாய்ப்பு உள்ளது.
 
இணையான இறக்குமதி சந்தைப் பொருட்களின் குறைக்கப்பட்ட விலைகளுடன் போட்டியிட முடியாமல், உத்தியோகபூர்வமான வணிகங்கள் ஒரு பாதகமான நிலையை எதிர்நோக்குகின்றன. சட்டபூர்வமான வழிகளை தவிர்த்து சுங்க வரி உள்ளிட்ட வரி அறவீடுகளைச் சிதைக்கும் வகையில் இவை நாட்டு பொருளாதாரத்துக்குள் கொண்டு வரப்படுகின்றன, இதன் மூலம் குறைந்த விலையில் விற்கப்படுவதாகும். இதனால், அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் நிலைப்பாட்டைத் தக்கவைக்க சிரமங்களை சந்திக்கிறார்கள்.
 
ஆரம்பத்தில் நுகர்வோர் சிறிய சேமிப்புகளை அனுபவிக்கலாம், ஆனால் நீண்ட காலத்தில் அதிக செலவுகளை சந்திக்க நேரிடும். இணை இறக்குமதி சந்தை தயாரிப்புகள் பெரும்பாலும் உத்தரவாதங்கள் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய ஆதரவு இன்றி இருப்பதால், சிக்கல்கள் நேர்ந்தால், நுகர்வோர் சிக்கல்களைச் சமாளிக்க முடியாமல் போகிறார்கள். இதனைத் தடுப்பதற்கென, ஒழுங்குமுறைகளை அமுலாக்குதல், நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் உத்தியோகபூர்வ வணிகங்களுக்கு ஆதரவு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்த இறக்குமதிகளை எதிர்த்துப் போராடும் ஒரு விரிவான மூலோபாயத்தின் அவசியம் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ளது.
 
நாட்டின் நிதி ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும், நியாயமான சந்தையை உறுதி செய்வதற்கும், இணையான இறக்குமதி சந்தை நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியதுஎன்றும், அரசாங்கம் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதனால், பொருளாதாரத்தை மீளெழுப்பும் மற்றும் நிலைத்தன்மை வாய்ந்த பொருளாதாரத்தை உருவாக்கும் வழியையும், இணை இறக்குமதி சந்தைப் பொருட்களின் குறுகிய கால நன்மைகளைப் போல், நீண்ட காலத்தில் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பெரிய அச்சுறுத்தல்களைச் சமாளிக்க முடியும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி