ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தியு பின்னர் பாடசாலைகளைத் திறப்பதற்கு ஓகஸ்ட் மாதத்தில் ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள றோயல் நோர்வே தூதரகம் இதுவரை காலமும் இயங்கிய புல்லர்ஸ் ஒழுங்கை, கொழும்பு 7 எனும் முகவரியிலிருந்து, கொழும்பு 2 இல் அமைந்துள்ள அலுவலகத் தொகுதிக்கு இடம் மாறியுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் பல்வேறு ஆயுதக்குழுக்கள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த ஆயுதக் குழுக்களை சேர்ந்தவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களை கொன்றுவிட்டு வீடுகளுக்குள் புகுந்து கொள்ளை அடிப்பது மற்றும் கால்நடைகளை திருடிச் செல்வது போன்ற நாசவேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரின் வசமிருக்கும் அமைச்சுகளில் சிலவற்றை அவ்விருவரிடமிருந்தும் அபகரிப்பதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அறியமுடிகின்றது.

பொது மக்கள் மீது அரசாங்கத்தால் கட்டவிழ்த்து விடப்படும் அடக்கு முறைகள் தொடர்ந்தால் மக்களின் அடிப்படை உரிமைகள் கூட பறிபோகும் நிலை ஏற்படும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

அட்டாளைச்சேனை கடற்கரையிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை (09) கடற்றொழிலுக்காகச் சென்ற இரு மீனவர்கள் இதுவரை கரைக்குத் திரும்பவில்லை என அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரூ. 58 பில்லியனுக்கும் அதிகமாக செலுத்த வேண்டும் என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கூறுகிறார்.

தனிமைப்படுத்தல் என்பது சுகாதார வழிமுறையே தவிர, அதை தண்டனையாகவோ, தடுத்து வைப்பதற்கான முறையாகவோ பயன்படுத்தக் கூடாதென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது. சில நாட்களுக்கு முன்னர் கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிராக நடைபெற்ற அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்ட, தற்போது கட்டாய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளவர்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே சடடத்தரணிகள் சங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சர் பதவியை பசில் ராஜபக்ஷவுக்கு ஏன் வழங்கினார் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கூறுகையில், பொருளாதாரத்தை கட்டி எழுப்பும் அவரது திறமையே இதற்கு காரணம் என்றார்.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி