நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த ஆண்டில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக
கவர்ந்த ஜெயிலர். இந்தப் படத்தில் ரிடையர்ட் ஜெயிலராக நடித்திருந்தார் ரஜினிகாந்த். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. படம் சர்வதேச அளவில் 600 கோடி ரூபாய் கலெக்ஷனை தாண்டிய நிலையில், ரஜினிகாந்த், நெல்சன் உள்ளிட்டவர்களுக்கு படத்தின் வசூலில் ஷேர் கொடுத்தது சன் பிக்சர்ஸ். மேலும் இவர்களுடன் படத்தின் இசையமைப்பாளர் அனிருத்திற்கும் விலையுயர்ந்த கார் கொடுத்து மகிழ்ந்தது.
இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்த பாகத்தை எடுக்க சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ள நிலையில் படத்திற்கான பிரீ புரொடக்ஷன்ஸ் வேலைகள் தற்போது நடந்து வருகிறது. தற்போது ரஜினிகாந்த் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்திலும் அவர் கமிட்டாகியுள்ள நிலையில், இந்தப் படங்களை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக அவரது நடிப்பில் லால் சலாம் படம் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ரஜினிகாந்த்:
நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த ஆண்டில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றது. நல்ல வசூலையும் குவித்தது. இந்தப் படம் சர்வதேச அளவில் 600 கோடி ரூபாய்களுக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் ரிடையர்ட் ஜெயிலராக ரஜினிகாந்த் நடித்த நிலையில், ஒரே நேரத்தில் அமைதியான மற்றும் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தன்னுடைய மகனின் கொலைக்கு பழிவாங்க அவர் களமிறங்கும் காட்சிகளில் ஆக்ரோஷத்தை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.
ஜெயிலர் 2 படம்:
இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்த பாகத்திற்கான வேலைகளை சன் பிக்சர்ஸ் மேற்கொண்டுள்ளது. ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான டிஸ்கஷனில் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இறங்கியுள்ளார். ஜெயிலர் படத்தில் க்ளைமாக்சில் அவரது மகன் இறந்துவிடுவதாக காட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்திற்கும் அவரது பேரனுக்கும் இடையிலான உறவை மையப்படுத்தி கதைக்களத்தை நெல்சன் உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் பாகத்திலேயே ரஜினிகாந்த் மற்றும் ரித்விக்கின் உறவுமுறை சிறப்பாக காட்டப்பட்டிருந்த நிலையில் இரண்டாவது பாகத்தில் இதை மேலும் சிறப்பாக்கும் முயற்சியில் தற்போது நெல்சன் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
ரஜினி -லோகேஷ் கூட்டணி:
அடுத்ததாக ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் இயக்கியுள்ள லால் சலாம் படம் ரிலீசாகவுள்ள நிலையில் தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்திலும் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் பிரீ புரொடக்ஷன்ஸ் பணிகளில் லோகேஷ் கனகராஜ் தற்போது ஈடுபட்டுள்ள நிலையில் வரும் ஏப்ரல் மாதத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் ஜெயிலர் 2 அறிவிப்பு:
லியோ படத்தை போல ரிலீஸ் தேதியை கமிட் செய்துவிட்டு இந்தப் படத்தின் இயக்கத்தை மேற்கொள்ளாமல் மிகவும் ரிலாக்சாக படத்தின் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக முன்னதாக லோகேஷ் கனகராஜ் தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்த நிலையில், இந்தப் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் இணைவார் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும்போது இதுகுறித்த அடுத்தடுத்த அப்டேட்களம் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். முதல் பாகத்தில் ஒவ்வொரு மொழியிலிருந்தும் முன்னணி நடிகர்கள் இணைந்த நிலையில் இந்தப் படத்தில் எந்தமாதிரியான நடிகர்களை நெல்சன் இணைப்பார் என்றும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.