சில தினங்களுக்கு முன்பு மதுபான உற்பத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட மெண்டிஸ் நிறுவனம் நல்லாட்சி அரசாங்க காலத்தில் அரச வங்கிகளிடமிருந்து பெற்றுக் கொண்ட கடனை இதுவரை செலுத்தாததுடன், செலுத்தப்பட வேண்டிய 14 பில்லியன் வரியும் இதுவரை செலுத்தப்படவில்லையென செய்திகள் கூறுகின்றன.

உற்பத்திக்கான அனுமதிப் பத்திரம் ரத்துச் செய்யப்பட்டமையால் வரி செலுத்த முடியாத அளவிற்கு நட்டமடைந்திருப்பதாக மெண்டிஸ் நிறுவனம் கூறியிருந்தது. இதனால் அரச வங்கிகளும் வரி அறவிடும் நிறுவனங்கள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டதால் தற்போது அனுமதியளிக்கப்பட்டதாக மதுவரித் திணைக்களம் கூறுகிறது.

மெண்டிஸ் நிறுவனம் வரி மற்றும் கடனை செலுத்தாதிருப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் அனுமதியளித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி உட்பட நிதி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய 6 பில்லியன் கடன் அல்லது செலுத்த வேண்டிய சுமார் 8 பில்லியன் வரிப் பணத்தில் 10 வீதத்தையாவது செலுத்த மெண்டிஸ் நிறுவனத்திற்கு சொத்துக்கள் இல்லையென தேசிய வருமானவரித் திணைக்களம், மதுவரித் திணைக்களம் மற்றும் அரச வங்கிகள் சமீபத்தில் நிதி அமைச்சிற்கு அறிவித்திருந்தன.

பிணைமுறி மோசடி சம்பந்தமாக குற்றஞ்சாட்டப்பட்ட அர்ஜுன் அலோசியஸின் பர்பக்சுவல் டிரசரிஸ் நிறுவனத்தின் கீழ் மெண்டிஸ் நிறுவனம் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி