சிறிலங்கா சுதந்திர கட்சியின் பெரும்பான்மை மத்திய குழு உறுப்பினர்கள் உடனடியாக அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளனர்.முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (08) ம் திகதி இரவு நடைபெற்ற ஸ்ரீ.ல.சு.க ஊடக சந்திப்பில் இந்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19- சீன நிறுவனம் இலங்கையில் சினோவக் தடுப்பூசியை இறுதி தயாரிப்பாக அறிமுகப்படுத்த முயற்சிக்கிறது என்ற செய்தி தொடர்பாக அகில இலங்கை நுகர்வோர் உரிமை செயற்பாட்டாளரான அசேல சம்பத் செய்த முறைப்பாட்டிற்கு அமைய அந்தச் செய்தியை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த Voice TUBE ஆசிரியர் துஷாரா செவ்வந்தி விதாரண 09.07.2021 (இன்று) சிஐடி குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அரசியல் சாசனத்தினால் வழங்கப்பட்டுள்ள கருத்துச் சுதந்திர உரிமையையும், தான் கொண்டுள்ள கருத்தை நாட்டு மக்களுக்கு தெரிவிப்பதற்கான உரிமையையும் மீறி ஆர்ப்பாட்டத்தை நிறுத்த சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு எங்கிருந்து அதிகாரம் கிடைத்தது? இல்லாத அதிகாரத்தை செயற்படுத்தியமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவிருப்பதாக, பல்லேகலை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து முன்னிலை சோஷலிஸக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் நேற்று (8) ஊடகங்களிடம் தெரிவித்தார்.

கரீபியன் தீவு நாடான ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ் (வயது 53) நேற்று முன்தினம் அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த பயங்கர சம்பவத்தின்போது அவரது மனைவி மார்டின் மோயிஸ் படுகாயம் அடைந்தார்.

அரசாங்கம் மீண்டும் அடக்குமுறைகளை கையாள முயற்சிக்கின்றதாக ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரித் திருத்தங்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காத்தான்குடியில் கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் சடலங்களை பழுதடையாமல் வைப்பதற்காக வாங்கப்பட்ட குளிரூட்டி கிழக்கு மாகாணத்துக்கு பயனளித்துள்ளது. கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் சடலங்களை (ஜனாஸா) தற்காலிகமாக வைத்து பாதுகாப்பதற்காக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களி சம்மேளனத்தினால் குளிரூட்டியொன்று வாங்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் அனைத்து நாட்களும் தலைநகர் டோக்கியோவில் அவசரநிலை அமுலில் இருக்கும் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

இன்று (8) காலையில் பத்தரமுல்ல பொல்துவ சுற்றுவட்டத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டிருந்த 31 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கூறுகிறார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ‘எல்சா’ புயல் பாதிப்பால், 25 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அமெரிக்காவின் தென்கிழக்கு கடற்பகுதியில் கடந்த 2 ஆம் திகதி உருவான ‘எல்சா’ புயல், படிப்படியாக வலுவடைந்து கடந்த 5 ஆம் திகதி கியூபா தீவை தாக்கியது. இதனை தொடர்ந்து நேற்றைய தினம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள டைலர் கவுண்டி பகுதியில் கரையை கடந்தது.

“இலவச கல்விக்கான மாணவர் மக்கள் இயக்கம்” ஏற்பாபடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் நடைபெற்ற வேளையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை மிருகத்தனமாக தாக்கிய பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி