நாடு பற்றிஎரியும் நிலைமையிலும் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு சென்றுள்ளார், நாடு பற்றிஎரிந்தாலும் அதுதொடர்பில் கவலைப்படாது, தங்களது சுகபோக வாழ்க்கைகளை அனுபவிக்கிறார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் இலங்கையை தளமாகக் கொண்ட மூன்று அமைப்புகளுக்கு பேஸ்புக் தடை விதித்துள்ளது.இதன்படி, இவ்வருடமும் பேஸ்புக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவான பதிவுகளை மேற்கொள்ள அந்நிறுவனம் தடை விதித்துள்ளது.

ஆயிரக்கணக்கான சிங்கள பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகளை செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டு, நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகபேறு மருத்துவப் பிரிவின் மருத்துவர் ஷாபி சஹாப்தீனுக்கு (Dr.shafi shahabdeen) செலுத்த வேண்டிய அனைத்து நிலுவைச் சம்பளத்தையும் செலுத்துமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டுள்ளதாக  அவரது சட்டத்தரணி சானக அபேவிக்ரம (Sanaka Abeywickrema) தெரிவித்துள்ளார்.

"சஜித் பிரேமதாஸவால் தற்காலிகமாக அரச எதிர்ப்பு அலையை உருவாக்க முடியும். ஆனால், அவரால் ஆட்சிக்கு வரமுடியாது. அதற்கான வாய்ப்பையும் நாம் வழங்கமாட்டோம்." என ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான டொமினிகன் குடியரசு நாட்டில் இன்று நடைபெற்ற விமான விபத்தில் பிரபல இசையமைப்பாளர், அவரது மனைவி மற்றும் குழந்தை உற்பட 9 பேர் உயிரிழந்தனர்.

இரண்டாயிரம் மெட்ரிக் தொன்னுக்கும் அதிக எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருந்த ஆசிரியரும் கவிஞருமான அஹ்னாப் ஜஸீமை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் உட்பட பல முற்போக்கு சக்திகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் மாநாடு டிசம்பர் 20 ம் திகதி அன்று ஸ்ரீ ஜயவர்தனபுர மொனார்க் இம்பீரியல் மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு நிகழ்வு நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு குழு மற்றும் செயலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக தற்போதைய ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழு, தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்கு, விசாரணைக்கு சமூகமளிக்குமாறு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

குரூப் கேப்டன் வருண் சிங் உடல் நாளை இந்திய விமானப்படை மூலம் நாளை போபால் கொண்டு செல்லப்படும் என இந்திய விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

workytamil 2

worky tamil

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி