வெளிநாட்டு மனைவிக்கு இலங்கை வருவதற்கான விசா வழங்குவதில்

தாமதம் மற்றும் அது தொடர்பில் எழுந்த குழப்பம் காரணமாக அண்மையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கூச்சலிட்ட பயணி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பயணியிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போதிலும் பின்னர்  அவரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்தில், அந்த விமானப் பயணியின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதையடுத்து, வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் புதிய திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய சூழ்நிலைக்கு உள்ளானது.  

எவ்வாறாயினும், விசா வழங்குவது தொடர்பில் GBS Technology Service, IVS Global மற்றும் VFS World Wide Holdings ஆகிய நிறுவனங்களுடன் அரசாங்கம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க ‘ தெரிவித்துள்ளார்.  

இருப்பினும் தொழில்நுட்ப பிழைகள் காரணமாக வீசா வழங்குவதில் தாமதம் மற்றும் முறைமையில் சிக்கல்கள் ஏற்படுவதாகவும், தொழில்நுட்ப பிழைகள் நிவர்த்தி செய்யப்பட்டதன் பின்னர், அடுத்த வாரம் இந்த முறைமை மீண்டும் அமுல்படுத்தப்படும் எனவும் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கான திகதியைக் கூற   வியானி குணதிலகா மறுத்துள்ளார்.


 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி