எலயாபத்து  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புலங்குளம் பகுதியில் உள்ள

விஹாரை ஒன்றைச் சேர்ந்த 10 மற்றும் 13 வயதுடைய இரண்டு  இளம்  பிக்குகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இரண்டு தேரர்கள் நேற்று முன்தினம் (4) கைது செய்யப்பட்டதாக எலயாபத்து பொலிஸார் தெரிவித்தனர்.

23 மற்றும் 24 வயதுடைய இரண்டு தேரர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு  கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விஹாரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இந்த இரு பிக்ககளும் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட  இரு தேரர்களும்  அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவிருந்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எலயாபத்து   பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் பண்டாரவின் பணிப்புரையின் பேரில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி