தரமற்ற தடுப்பூசி இஙக்குமதி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்
வைக்கப்பட்டுளள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேக நபர்களும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (06) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இது தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.