கோட்டாபய ராஜபக்‌ஷ பதவியை விட்டு ஓடியமையை அடுத்து புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கு நாடாளுமன்றத்தில் நடந்த

தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுடன் போட்டியிட்டவர் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும.

முன்னாள் ஜனாதிபதிகள் குறித்து அவர் ஒரு கருத்துத் தெரிவித்திருக்கின்றார்.

தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ள நான்கு முன்னாள் ஜனாதிபதிகளும் தமது சொந்த நலனுக்காகவும், மக்களுக்காகவும் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டுமென டலஸ் அழகப்பெரும கோரியிருக்கின்றார்.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்‌ஷ, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்‌ஷஆகியோர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டுமென அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

"அரசியலில் இருந்து விலகி இருப்பது அவர்களின் சொந்த ஆரோக்கியத்திற்கும், மக்களின் நலனுக்கும் நல்லது. முன்னாள் ஜனாதிபதிகள் என்ற முறையில் அவர்களுக்காக செலவிடப்படும் பொது நிதியை தமது எந்த அரசியல் விஷயத்திற்கும் சாதகமாக அவர்கள் பயன்படுத்தக்கூடாது" என்று அவர் குறிப்பிட்டார்.

ஓரளவுக்கு நியாயமான கோரிக்கைதான். ஆனால் அரசியலில் ஊறிய இரத்தம் சும்மா இருக்க விடாதே....!

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி