ஆயிரக்கணக்கான சிங்கள பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகளை செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டு, நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகபேறு மருத்துவப் பிரிவின் மருத்துவர் ஷாபி சஹாப்தீனுக்கு (Dr.shafi shahabdeen) செலுத்த வேண்டிய அனைத்து நிலுவைச் சம்பளத்தையும் செலுத்துமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டுள்ளதாக  அவரது சட்டத்தரணி சானக அபேவிக்ரம (Sanaka Abeywickrema) தெரிவித்துள்ளார்.

கருத்தடை அறுவை சிகிச்சை செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டு மருத்துவர் ஷாபி சிஹாப்தீன் கைது செய்யப்பட்ட பின்னர், அவர் சேவையில் இருந்து நீக்கப்படவில்லை என்பதுடன் அவர் கட்டாய விடுமுறையில் அனுப்பபட்டுள்ளார்.

இதன் காரணமாக சம்பள நிலுவையை செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மருத்துவர் ஷாபி சிஹாப்தீன்,  சிங்கள பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார் என்ற  சர்ச்சைக்குரிய செய்தியை சிங்கள பத்திரிகை ஒன்று கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி முதலில் வெளியிட்டிருந்தது. இதனையடுத்து சில தினங்களில் குற்றவியல் விசாரணை திணைக்களம் அவரை கைது செய்தது.

விசாரணைகளை நடத்திய குற்றவியல் விசாரணை திணைக்களம், மருத்துவர் ஷாபிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க சாட்சியங்கள் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனால், கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்களுக்கு பின்னர் அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் திகதி மருத்துவர் ஷாபி பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி