இரண்டாயிரம் மெட்ரிக் தொன்னுக்கும் அதிக எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அந்த கப்பலில் கொண்டுவரப்பட்டுள்ள எரிவாயுவின் தரத்தை பரிசோதிப்பதற்காக மாதிரிகள் பெறப்பட்டு, அவற்றை பரிசோதிப்பதற்காக இரு நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளதாக குறித்த சபையின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க குறிப்பிட்டார்.

இதனிடையே, மர்கெப்டன் இரசாயன பதார்த்தம் உரிய தரத்தில் காணப்படாமையால், மற்றமொரு கப்பலில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்காதிருப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை நேற்று (15) நடவடிக்கை எடுத்திருந்தது.

தற்போது நாட்டின் பல பகுதிகளில் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி