வருகை்குப் பின்னர் விசா வழங்கும்  (On Arrival )வசதி தொடர்பான சர்ச்சைக்குரிய

சூழ்நிலை குறித்து பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சர் டிரான் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

புதிய விசா முறை தொடர்பான பிரேரணை நாடாளுமன்றத்தில் விவாதம் இன்றி  கடந்த வருடம் நவம்பர் 23ஆம் திகதி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்டார்.

விசா கட்டண விவகாரமும் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டங்களின் ஒரு பகுதியாகும்,  ஆனால் அது நவம்பரில் நிறைவேற்றப்பட்டது,

இருப்பினும்  ETA அல்லது மின்னணு பயண ஒப்புதல் முறை மூலம் மாற்றத்தை செயல்படுத்த முடியாது.  எனவே VFS அமைப்பு மூலம் அதனைச் செயற்படுத்த. நாங்கள் ஏப்ரல் 17 வரை காத்திருக்க வேண்டியிருந்தது என்று அமைச்சர் கூறினார்.

ETA அமைப்பில் உள்ள குறைபாடுகள் காரணமாக இந்த முறையை மாற்றுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதாக தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

"எங்களுக்கு VFS தொடர்பாக ஒரு முன்மொழிவு அனுப்பப்பட்டது. VFS என்றால் என்ன என்று  அனைவருக்கும் தெரியும். 151 நாடுகளில் 67 அரசாங்கங்களால் சுமார் 3,300 மையங்களில் பயன்படுத்தப்படும் நிறுவனத்தின் சேவையே இது என்றும் அவர் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி