எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஆசையை நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவும் பகிரங்கமாக

வெளியிட்டிருக்கின்றார்.

அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன இவரைத் தமது சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்திற்கு அழைத்திருந்தார்.

அங்கு மைத்திரிபால சிறிசேனவும் அவரது சகாக்களும் வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஆசையை விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு ஊட்டினர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

தமது தலைமையில் உருவாகவிருக்கும் புதிய அரசியல் கூட்டணியின் வேட்பாளராக விஜயதாஸ ராஜபக்ஷவை நிறுத்தலாம் என்ற நப்பாசையைத்தான் மைத்திரியும் அங்கிருந்த ஏனையோரும் அவருக்கு வழங்கினர் எனக் கூறப்படுகின்றது.

அந்தக் கயிற்றை விழுங்கிக் கொண்டுள்ள விஜயதாஸ ராஜபக்ஷ அது பற்றிய விடயத்தை இப்போது பகிரங்கமாக அறிவித்துருக்கின்றார்.

'ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் பலரும் என்னை வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வலியுறுத்திக் கேட்டிருக்கின்றார்கள். அதனால் அவ்விடயம் குறித்து விரைவில் நான் முடிவு செய்து அறிவிக்க வேண்டிஉள்ளது” என்று அவர் கூறியிருக்கின்றார்.

ஆனால், ஜனாதிபதித் தேர்தலில் அவரைப் போட்டியிட வெற்றிலை வைத்த சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன இப்போது அந்தப் பதவியில் இல்லை. அவரது தலைமைத்துவத்திற்கு எதிராக நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு வழங்கியுள்ளது.

விஜயதாஸ ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு அழைத்த சுதந்திரக் கட்சியின் செயற்குழுவும் இன்று குழப்பத்தில் உள்ளது. கட்சியே யாரின் கைகளில் உள்ளது, எது செயற்குழு, அரசியல் குழுவில் யார் இருக்கின்றார்கள் என்பவை எல்லாம் குழப்பத்தில் உள்ளன.

நீதிமன்றத்தில் தீர்க்கமான சில முடிவுகள் எடுக்கப்படும் வரை சு.கவின் நிலைமை சோபிக்கார் விஜயதாஸ!

இப்படி இழுபறியாக இருக்கும் என்பது திண்ணம். அவ்வாறு இழுபறியில் இருக்கும் ஒரு கட்சியின் பின்புலத்தை நம்பி விஜயதாஸ ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் இறங்குவது என்பது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாகத்தான் முடியும்.

வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள், இங்குள்ள கட்சிகளைப் பார்த்து வாக்களிக்க மாட்டார்கள் என்றும் போட்டியிடும் வேட்பாளர்களைப் பார்த்துதான் வாக்களிப்பார்கள் என்றும் கூறும் விஜயதாஸ ராஜபக்ஷ, கட்சிகள் மீதான மக்களின் நம்பிக்கை பொய்த்தே போய்விட்டது, அது எல்லோருக்குமே நன்கு தெரியும் என்றும் கூறுகின்றார்.

அவர் கூறுவது உண்மைதான். மக்களின் நம்பிக்கை பொய்த்துத்தான் போய்விட்டது. தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை மக்கள் உணரத் தலைப்பட்டு விட்டார்கள்.

ஆனால் மாற்று அரசியல் தலைமைத்துவமாக விஜயதாஸ ராஜபக்ஷவை மக்கள் சிந்திக்கும் நிலைமை ஒன்றும் ஏற்பட்டு விடவில்லை என்பதுதான் கள யதார்த்தம்.

ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இருக்கும் ஏனைய வேட்பாளர்களை விட ஒன்றும் சிறப்பும் மக்கள் கவர்ச்சியும் திறமையும் கொண்டவர் அல்லர் விஜயதாஸ ராஜபக்ஷ.

அவர் பேரினவாதப் போக்குக் கொண்டவர். பௌத்த - சிங்களப் பெரும் தேசியவாதச் சிந்தனை மிக்கவர். அதனால் பௌத்த மத பீடங்களுடன் நெருக்கமானவர். பேரினப் போக்கு கொண்டவர் என்பதால் சிறுபான்மை இன வாக்குகள் எக்காரணம் கொண்டும் அவருக்கு கிட்டா. அதே சமயம் பேரினப் போக்குக் கொண்ட தென்னிலங்கை பௌத்த - சிங்கள மக்கள் மத்தியிலும் வசீகரமும் தனிக் கவர்ச்சியும் கொண்ட அரசியல் தலைவரும் அல்லர் அவர்.

இந்தப் பின்புலங்களில், இலகுவாக ஊட்டக்கூடிய பேரினவாத மேலாண்மை வெறிப்போக்கைத் தட்டிவிட்டு கூட வாக்குச் சுருட்டக் கூடிய கவர்ச்சியும் வசீகரமும் அவரிடம் இல்லை.

இத்தகைய ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராகி ஒன்றும் பெரிதாகச் சாதித்துவிடப் போவதில்லை என்பது வெளிப்படையானது.

 

(நன்றி – காலைமுரசு)

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி