குளியாபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவர்  காணாமல்

போன சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் இன்று (06) தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

சந்தேக நபரை தலா 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க குளியாபிட்டிய நீதிவான் ரந்திகா லக்மால் உத்தரவிட்டுள்ளார்.

சுஜித் பெர்னாண்டோ அல்லது "சிகிதி"  என்பவரே பிணையில் விடுவிக்கப்பட்டார்.

குளியாபிட்டிய கபலேவ பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய சுசிதா ஜயவன்ச என்ற  இளைஞரே சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தார்.

கடைசியாக காதலியின் தந்தையின் தொலைபேசி அழைப்பை அடுத்து அவர்  அந்த வீட்டுக்குச்  சென்றுள்ளார்.

பின்னர் குறித்த இளைஞனை பிரதேசத்தில் உள்ள மாகாண சபை முன்னாள்  உறுப்பினர் ஒருவரின் வீட்டுக்கு  அழைத்துச் செல்லுமாறு காதலியின் தந்தை கூறியதாக இந்தச் சம்பவம் கைது செய்யப்பட்ட  இருவரும் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இச்சம்பவத்தின் பின்னர் பிரதான சந்தேக நபர் மற்றும் அவரது மனைவி, காணாமல்போன இளைஞனின் காதலியான அவரது மகள் மற்றும் இரண்டு மகன்கள், பிரதான சந்தேக நபரின் சகோதரி மற்றும் அவரது கணவர் ஆகியோர் வீடுகளை விட்டு வெளியேறி பிரதேசத்தை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி