விவசாய சட்டங்களை ஓராண்டுக்கு செயல்படுத்திப் பார்ப்போம். அவை விவசாயிகளுக்குப் பலன் அளிக்காவிட்டால் அவற்றைத் திருத்துவோம் என்று கூறியுள்ளார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.இந்த 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைகளில் தங்கள் போராட்டத்தைத் தொடங்கி இன்று வெள்ளிக்கிழமை ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், பாஜக இந்த சட்டங்களுக்கு ஆதரவாக பல விதங்களில் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறது.

மஹிந்தமீது கருத்துதடைகளை வைக்குமாறு தேசிய அமைப்புகள் பசிலிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கை பத்திரிகைக் குழுவின் மூத்த விரிவுரையாளரும்,  அதனது தலைவருமான மஹிந்த பதிரன அவரது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு தேசிய அமைப்புகளிடமிருந்து கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.

சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜன பலவேகயவின் அரசியலமைப்பு கட்சியின் இடைக்கால செயற்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அது கடந்த சனிக்கிழமை பண்டாரவல ஹோட்டலில் இடம்பெற்ற விசேட சந்திப்பில் நடைபெற்றுள்ளது.அரசியலமைப்பின் படி, கட்சித் தலைவர் பதவி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள்,துணைத் தலைவர் அல்லது துணைத் தலைவர்கள் ஆகிய நியமனங்கள் இடம்பெற்றுள்ளன. அரசியலமைப்பின் படி, கட்சித் தலைவர் ஒவ்வொரு ஆண்டும் செயற்குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்.

கொரோனா ஒழிப்பிற்கான தடுப்பூசி தொடர்பில் உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ள நிலையில், கேகாலையை சேர்ந்த தம்மிக்க பண்டார தயாரித்த பாணி மருந்து இலங்கையில் அநேகமானவர்களது கவனத்தை ஈர்த்துள்ளது.இந்த மருந்து தொடர்பில் ஆராய்ந்த ஆயுர்வேத திணைக்களம் தம்மிக்க பண்டாரவிற்கு ஆயுர்வேத மருந்து உற்பத்தி நிலையமொன்றை பதிவு செய்வதற்கான எழுத்துமூல அனுமதியை வழங்கியுள்ளது.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள சர்வதேச ஆடை நிறுவனத்தின் ஊழியர்கள் குண்டர்களின் எதிர்ப்பையும் மீறி, ஆண்டிறுதி போனஸில் பாதியை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.தொழிற் திணைக்கள அதிகாரிகள், ஆடை நிறுவன நிர்வாகம் மற்றும் ஊழியர்களுடன் 22ஆம் திகதி,  செவ்வாய்க்கிழமை கலந்துரையாடலுக்குப் பின்னால், நெக்ஸ்ட் நிர்வாகம் ஊழியர்களுக்கு 50 சதவீத போனஸை வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளதாக, பெரும்பாண்மையான பெண்கள் பணிபுரியும் முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் தொழிலாளர் பிரச்சினைகளை கையாளும் தாபிந்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமிலா துஷாரி தெரிவித்துள்ளார்.

கொவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக இறந்த 20 நாள் குழந்தையின் பெற்றோர் நேற்று (23) உச்சநீதிமன்றத்தில் ஒரு அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

தற்போதைய அரசாங்கம் போன்ற கீழ் மட்ட இனவெறித் தலைவர்களைக் கொண்ட ஒரு அரசாங்கத்தை நான் பார்த்ததில்லை முந்தைய அரசாங்கத்தின் தேசிய சகவாழ்வு, உரையாடல் மற்றும் உத்தியோகபூர்வ மொழிகளின் அமைச்சர் இதைப் பற்றி வெட்கப்படுகிறார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் புகைப்படங்களையும் விபரங்களையும் ஊடகங்களுக்கு வெளியிடுவதற்கான பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சரின் தீர்மானத்தை, நாட்டின் உயர்மட்ட சட்ட ஆலோசகர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் கண்டித்துள்ள நிலையில், ஊடக கண்காணிப்பாளர்களால் சமூக கலந்துரையாடல்களுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டு முறை கொரோனா தொற்று அலையை எதிர்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் முன்னின்று செயற்படும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தத் தவறியுள்ள நிலையில், அவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி உபாலி அபேரத்னே நியமிக்கப்பட்டிருப்பது அவரது பின்னணியையும் நடத்தையையும் கருத்தில் கொண்டு காணாமல் போனவர்களின் அலுவலகத்திற்கு அவரை தலைவராக நியமித்திருப்பதுகா ணாமல்போ ணவர்களின் உரவினர்கள் விசனம்தெரிவித்துள்ளனர்.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி