ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்காத அரசாங்கக் கட்சியைப் பெயரளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை
வெளியேறுமாறு ஜனாதிபதி அறிவித்தல் வழங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதிக்கு ஆதரவான அமைச்சர்கள் உள்ளிட்ட பல கட்சி அமைப்புகளின் கோரிக்கையை கருத்திற் கொண்டே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
இவ்வாறான இக்கட்டான தருணத்தில் பெயருக்கு மாத்திரம் பாராளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்தில் வைத்திருப்பதில் பயனில்லை என ஜனாதிபதிக்கு விசுவாசமானவர்கள் தெரிவித்துள்ளனர். தமது கட்சியின் தீர்மானங்களை எதிர்க்கட்சிகளுக்கு வழங்கி அரசியல் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக விசுவாசிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
எனவே முக்கியமான தருணத்தில் ஆதரவளிக்காதவர்களை நீக்கி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் செயற்பாடுகளை சுதந்திரமாக முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு இவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தக் கோரிக்கையை பரிசீலித்த ஜனாதிபதி, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 4 இராஜாங்க அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், வேறு சில இரஜாங்க அமைச்சர்கள் மற்றும் அடையாளம் காணப்பட்ட எம்.பி.க்கள் குழுவை எச்சரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இதேவேளை, பல இராஜாங்க அமைச்சர்கள் தங்களை பதவியில் இருந்து நீக்க வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக இராஜினாமா செய்ய வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.