கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள சர்வதேச ஆடை நிறுவனத்தின் ஊழியர்கள் குண்டர்களின் எதிர்ப்பையும் மீறி, ஆண்டிறுதி போனஸில் பாதியை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.தொழிற் திணைக்கள அதிகாரிகள், ஆடை நிறுவன நிர்வாகம் மற்றும் ஊழியர்களுடன் 22ஆம் திகதி,  செவ்வாய்க்கிழமை கலந்துரையாடலுக்குப் பின்னால், நெக்ஸ்ட் நிர்வாகம் ஊழியர்களுக்கு 50 சதவீத போனஸை வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளதாக, பெரும்பாண்மையான பெண்கள் பணிபுரியும் முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் தொழிலாளர் பிரச்சினைகளை கையாளும் தாபிந்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமிலா துஷாரி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுநோயால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வருட இறுதியில் போனஸ் வழங்குமாறு கோரிக்கை விடுக்கும் தொழிலாளர்களை, சர்வதேச ஆடை உற்பத்தி நிறுவனமொன்று   குண்டர்களை பயன்படுத்தி அடக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை தடுக்க குண்டர்களைப் பயன்படுத்துவதாக ஆடை உற்பத்தி நிறுவனமான நெக்ஸ்ட்  மீது குற்றம் சாட்டப்பட்டது.

நிறுவன  முகாமைத்துவம் பிரதான நுழைவாயில் வழியாக ஊழியர்கள் நுழைவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுத்ததோடு, பொலிஸ் அதிகாரிகள் அழைத்து வரப்பட்டதோடு, இந்த ஊழியர்கள் பாதாள உலக தரப்பினரால் அச்சுறுத்தப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

டிசம்பர் 22 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து, டிசம்பர் 23 முதல் டிசம்பர் 30 வரை நிறுவனத்தை மூடிவிட்டு  ஊழியர்களுக்கு கிறிஸ்மஸ் விடுமுறையை வழங்க நிர்வாகம் தீர்மானித்துள்ளதோடு, தொழிற் திணைக்கள அதிகாரிகளுடன்  ஜனவரி 8ஆம் திகதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 50 சதவீத போனஸை செலுத்த இந்தப் பேச்சுவார்த்தையின் போது தீர்மானிக்கப்படும் என தாபிந்து குழுமத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சமிலா துஷாரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சுமார் 2,000 பேர் பணியாற்றும் நெக்ஸ்டில் சுமார் 600 ஊழியர்கள் இரண்டாவது கொரோனா தொற்று அலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக, பெரும்பாண்மையான பெண்கள் பணிபுரியும் முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் தொழிலாளர் பிரச்சினைகளை கையாளும் தாபிந்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமிலா துஷாரி தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக, சில தொழிலாளர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதோடு,  ஏனையவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டதாக, தெரிவித்துள்ள சமிலா துஷாரி அந்த காலகட்டத்தில் ஊழியர்களின் கொடுப்பணவுகள் மற்றும் சம்பளங்களில் குறைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக  வலியுறுத்தினார்.

இத்தகைய சூழ்நிலையில், சில ஊழியர்களுக்கு டிசம்பர் மாதம், ஐம்பது சதவீத மிகக் குறைந்த அளவு  போனஸே கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

போனஸ் உள்ளிட்ட பல கோரிக்கைகளின் அடிப்படையில் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கட்டுநாயக்க சீப் வே லங்கா ஆடை நிறுவனம், ஊழியர்களுக்கு போனஸ் ஏதும் வழங்காமல், காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி