தான் வெற்றி பெற்றால் எதிர்வரும்
ஒக்டோபர் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டமாட்டேன் என்றும் பொதுத்தேர்தலுக்கு பின்னரே பாராளுமன்றத்தை கூட்டுவேன் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரான ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மரதன்கடவளையில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய அவர், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, பொதுத்தேர்தல் நடைபெறும் வரை ஒன்றரை மாதங்களுக்கு அரசியல் சாசனத்தின்படி நாம் நாட்டை ஆட்சி செய்வோம்.
"செப்டம்பர் 3 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடியது. 150-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் பங்கேற்ற நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் அதுதான்.
நான் வெற்றி பெற்றால் திட்டமிட்டபடி அக்டோபர் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்ட மாட்டேன். பொதுத் தேர்தலுக்குப் பிறகுதான் நாடாளுமன்றம் கூட்டப்படும்.
எமது வெற்றி குறித்து எதிர்க் கட்சியினர் ஆத்திரமடைந்துள்ளதாகத் தெரிவித்த திஸாநாயக்க, தற்போது தமது தோல்வியை எவ்வாறு தவிர்ப்பது என அவர்கள் திட்டமிட்டு வருவதாகக் கூறினார்.