எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அத்துரலிய ரத்தன தேரர் பெயரிடப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் நேற்றைய கூட்டத்தின் போது இவரின் பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஏறத்தாழ முழுக்க வெளியாகி விட்டன. அங்கு ஆளும் இடதுசாரிகள் அலை வீசி விட்டது. அந்த சூறாவளியில் சிக்கி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கூட்டணி வீசப்பட்டுள்ளது.

11 பேர் கொல்லப்பட்டு மற்றும் 100ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த மஹர சிறை படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகளை அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் என விமர்சிக்கப்பட்டுள்ளனர். சட்டமா அதிபர் திணைக்களம் இந்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்றால் மரணித்த முஸ்லிம் மக்களினது சடலங்களை அவர்களது மத நம்பிக்கைகளை உதாசீனம் செய்து கட்டாயத் தகனம் செய்வதும், நாட்டுக்கு வெளியே ஆளரவமற்ற தீவொன்றில் அவர்களது சடலங்களைப் புதைப்பது தொடர்பாக ஆராய்வதும் முஸ்லிம் மக்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் பௌத்த, சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையே தவிர சுகாதார நடைமுறை அல்ல என்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த 65 வயது சீக்கிய மதகுரு சந்த் பாபா ராம் சிங் புதன்கிழமை மாலை தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது. ஹரியாணா மாநிலம், கர்னால் அருகே உள்ள சிங்காரா கிராமத்தை சேர்ந்தவர் இவர்.

இலங்கையில் கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்ய அனுமதிப்பது குறித்து மாலைதீவு அரசாங்கம் தெரிவித்திருப்பதற்கு ஐக்கியநாடுகள் மனித உரிமை நிபுணர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
மதநம்பிக்கைகள் குறித்த ஐக்கியநாடுகளின் விசேட அறிக்கையாளர் அஹ்மெட் சஹீட் இதனை தெரிவித்துள்ளார்.

நிலையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாரிய வீழ்ச்சியை நோக்கி இலங்கை நகர்ந்துள்ளதை இலங்கை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

கொவிட் - 19 தொற்றுக்குள்ளான ஜனாசாக்களை நல்லடக்கம் செய்ய முன்வந்துள்ள மாலைதீவு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளையில், அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி இலங்கையிலேயே வாழ்ந்து மரணித்த பின்னர் இங்கு நல்லடக்கம் செய்யப்படுவதற்கு எங்களுக்குள்ள அடிப்படை உரிமையை மறுப்பதற்கு இந்நாட்டு அரசாங்கம் மேற்கொள்ளும் எல்லாவிதமான முயற்சிகளையும் எதிர்த்து நிற்போம்.

பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு இரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனையை விதிக்கும் அவசர சட்டத்திற்கு அந்நாட்டு அதிபர் இம்ரான் கான் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி