1200 x 80 DMirror

 
 

பொலன்னறுவை ஜயந்திபுரவில்

நேற்று (7) இரவு வேனும் லொறியும் மோதி இடம்பெற்ற விபத்தில் இந்திய பிரஜை  ஒருவர உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

பொலன்னறுவையில் இருந்து மின்னேரியா நோக்கிப் பயணித்த வேனும் அரிசி ஏற்றிச் சென்ற லொறியும் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
 
உயிரிழந்தவர் உட்பட இந்தியப் பிரஜைகள் இந்நாட்டில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிய வந்த தொழில்நுட்பவியலாளர்களாவர்.
 
வேகமாக வந்த வேன் லொறியின் பின்புறம் மோதியதில் சாரதி இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்த இந்திய பிரஜை உயிரிழந்தார்.
 
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
லொறி மற்றும்  வேன் சாரதிகள் பொலன்னறுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் இன்று (7) பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி