நாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்


நாட்டை கட்டியெழுப்பும் முறையைக் கூறும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான விவாதம் இன்று  (07) ஆரம்பமாகிறது.

மார்ச் 12 இயக்கம்' ஏற்பாடு செய்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் விவாதத் தொடரின் முதலாவது விவாதமே இன்று (07) நடைபெறவுள்ளது.

இன்று (07) பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெறவுள்ளது.

'நாட்டை மீட்பது எப்படி?' என்ற தலைப்பில் விவாதம் நடைபெறவுள்ளது. சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்க்ஷ, திலித் ஜயவீர மற்றும் பி. அரியநேத்திரன் ஆகிய ஜனாதிபதி வேட்பாளர்கள் இன்றைய விவாதத்தில் பங்கேற்பர்.

இதில் பங்கேற்கும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு 6 கேள்விகள் அனுப்பப்படும் என Pafrel அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த விவாதம் அனைத்து முக்கிய தொலைக்காட்சி சேவைகளிலும் 200க்கும் மேற்பட்ட சமூக ஊடகங்களிலும் 3.00 முதல் 5.00 வரை நேரடியாக ஒளிபரப்பப்படும்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட விவாதத்தில் 12 வேட்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர், விவாதம் நாளை 8 மற்றும் மறுதினமான 9 ஆம் திகதிளில் நடைபெறஙுள்ளது.

முழுமையான விவாதம் தொடர்ச்சியாக 3 நாட்களிலும் தேசிய தொலைக்காட்சி மற்றும் March 12 Movement இன் Facebook மற்றும் YouTube தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி