11 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைகளை நேரில் கண்ட சாட்சிகளை சித்திரவதை செய்வதாகவும், அவர்களை சிறைக்குள் வலுக்கட்டாயமாக தடுத்து வைத்துள்ளதாகவும் சிறை நிர்வாகம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு சாட்சியாக இருந்த கைதிகளை விடுவிப்பதைத் தடுப்பதன் மூலம் மஹர படுகொலைக்கான சாட்சிகளை மறைக்க அதிகாரிகள் முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மங்கள எதற்கு வர நினைக்கிறார்! கோதபாயவுக்கு ஜக் அடிக்கவா? ரணிலை மீண்டும் முன்னணியில் கொண்டு வரவா?

கொரோனா தடுப்பு மருந்து எனக்கூறி நாட்டு மருத்துவர் ஒருவர் வழங்கிய 'பாணி' ஒன்றை அருந்திய இலங்கை ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த கோவிட்-19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில்  பொதுமக்களின் காணிகளை சுவிகரிப்பதற்கு எதிராக பாரிய போராட்டமொன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அப் பகுதியில் பெருமளவில் பொலிசார் குவிக்கப்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் விடயத்தில், இந்தியாவைப் பகைத்துக் கொள்ள முடியாது என, துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்களில் 7,727 பேர் வாக்காளர் இடாப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஆறு வருடம் கஷ்டப் பிரதேசங்களில் சேவையாற்றிய ஆசிரியர்கள் தமக்கான இடமாற்றத்தை வழங்மாறு கோரி மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள்.

விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதில் ஆரி முதல் இடத்தையும், பாலாஜி முதல் ரன்னர்அப்பாகவும், ரியோ, ரம்யா, சோம் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களையும் பெற்றுள்ளனர். இந்த ஐவரில் சோம் சற்று நேரத்துக்கு முன்னர் எவிக்ட்டாகி வெளியே வந்துள்ளார்.

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இந்திய குடியரசு தினத்தன்று நடத்த உள்ளதாக அறிவித்துள்ள ட்ராக்டர் பேரணி தொடர்பாகத் தலையிட முடியாது என்று இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

18 வயதை பூர்த்தி செய்த அனைவருக்கும் இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான யோசனையை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என பொது பாதுகாப்புத்துறை இராஜாங்க அமைச்சர், ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி