வாக்குச்சாவடிகளில் குழப்பத்தை
ஏற்படுத்துபவர்கள் மீதும் வாக்குப்பதிவுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கும் தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கும் கும்பலைக் கட்டுப்படுத்துவதற்கும் பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துபவர்களை உடனடியாக கைது செய்யுமாறு காவல்துறைக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடு முழுவதும் சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் பாதாள உலகக் கும்பல்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்காக விசேட புலனாய்வுக் குழுக்களும் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் சுமார் 2 லட்சம் சட்டவிரோத துப்பாக்கிகள் இருப்பதாக பாதுகாப்புப் படையினர் மதிப்பிட்டுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே எழுபது இலட்சம்.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க சுமார் பத்து இலட்சம் வாக்காளர்கள் இணைந்துள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.