பாதுக்க மஹிங்கல பிரதேசத்தில்
வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளன.
வேன், கெப் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியனவே தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர்.
ஹொரணை மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் தீயை அணைக்க முயற்சித்த போதிலும், மூன்று வாகனங்களும் ஏற்கனவே தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தோட்டத்துக்கு அருகில் உள்ள பெரிய இந்தக் காணிக்குள் யாரும் நுழைய முடியாது எனவும், இந்த வாகனங்களுக்கு யாராவது தீ வைத்தாரா அல்லது ஒரு வாகனம் தீப்பிடித்து மற்ற வாகனங்களும் தீப்பிடித்ததா என்பது இதுவரையில் தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.