கொவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக இறந்த 20 நாள் குழந்தையின் பெற்றோர் நேற்று (23) உச்சநீதிமன்றத்தில் ஒரு அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

மனுதாரர்கள் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்ததிலிருந்து அனைத்து மருத்துவ அறிக்கைகளையும் உடலை அகற்றுவதற்கு முன் சமர்ப்பித்திருக்க வேண்டும் என சுகாதார அதிகாரிகளுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

மனுதாரர்கள் (பெற்றோர்) மொஹமட் பாரூக் முகமது பாஹிம் மற்றும் பாதிகா ஷஃப்னாஸ் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் பணிப்பாளர், சுகாதார ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர், அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாங்களும் எங்களது குழந்தையும் கொவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதை நிரூபிக்க எந்த ஆவண ஆதாரங்களும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று இரு மனுதாரர்களும் கூறுகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி