1200 x 80 DMirror

 
 

நிதி அமைச்சர் அஜித் நிவர்ட் கப்ரால் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மீண்டும் ஜயந்த கெட்டகொட நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ளார்.

கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிராக ஒகஸ்ட் 3ம் திகதி நடைபெற்ற அமைதியான எதிர்ப்பு நடவடிக்கையில் பங்கேற்ற குற்றத்திற்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள கோஷிலா ஹன்ஸமாலிக்கு கொரோனா தொற்றியிருப்பதால் அம்பேபுஸ்ஸ சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

மத்திய சூடானில் ஏற்பட்ட போக்குவரத்து விபத்தில் 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.மத்திய சூடான் நாட்டில் கெஜிரா பகுதியில் அல்-காம்லின் என்ற பகுதியில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் ஒன்றும், சிற்றுந்து ஒன்றும் மோதி விபத்திற்குள்ளானது.

இத்தாலி சென்றிருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக அங்கு வசிக்கும் இலங்கையர்கள் குழுவால் (bologna city) இன்று (12) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உலக அளவில் மக்கள் அடர்த்தி அதிகம் கொண்ட நாடுகளில் ஒன்றாக விளங்கும் வங்காளதேசத்தில் தொற்று வேகமாக பரவியது.

அரசாங்கத்தின் தலைவிதி மக்கள் நீதிமன்றத்தில் முடிவு செய்யப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கொரோனா  தொற்றுநோயை எதிர்கொள்ளவும், எதிர்கால தொற்றுநோய்களுக்கு எதிராக சட்டபூர்வமாக போராடவும், பொதுச் சுகாதார அவசர சட்ட வரைபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிமுகப்படுத்தி ஒரு வருடம் கழித்து, தனியார் துறை ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் புதிய திட்டங்களை முன்வைத்துள்ளது.

சதோச மற்றும் அரச நிறுவனங்களின் ஊடாக ஆடைகளை விற்பனை செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக வர்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஐவரி கோஸ்ட் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஐவரி கோஸ்ட்டின் மேற்கு பகுதியில் புர்கினா பாசோ நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள லோகோடோகோ நகரில் இருந்து அந்த நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இத்தாலிக்கு விஜயம் செய்துள்ள நிலையில், அங்குள்ள இலங்கையர்கள் நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எதிர்கொண்டுவரும் பாரிய கடன் பிரச்சினையை தீர்ப்பதற்காக 250 கோடி அமெரிக்க டொலர்களை சர்வதேச சந்தையிலிருந்து கடனாகப் பெற முயற்சி செய்யப்பட்டு வருகிறதாக கூறப்படுகின்றது.

நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் எதிர்வரும் திங்கட்கிழமை தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை பாராளுமன்றச் செயலாளரிடம் ஒப்படைக்கவுள்ளார். இதன்படி, அவர் மத்திய வங்கி ஆளுநராக அடுத்த வாரம் நியமிக்கபடவிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

கொடிய கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்த இராணுவத்தை பயன்படுத்துவதற்கான காரணத்தை பாதுகாப்பு செயலாளர் வெளியிட்டுள்ளார்.

அம்பாறை – தமன பகுதியை ஊடறுத்து வீசிய கடும் காற்றினால் 23 வீடுகளுக்கு சேதமேற்பட்டுள்ளது.நேற்று (10) மாலை வீசிய பலத்த காற்றினால் தேவாலஹிந்த பகுதியில் 21 வீடுகளுக்கும் திம்பிரிகொல்ல பகுதியில் 02 வீடுகளுக்கும் சேதமேற்பட்டுள்ளதாக தமன பிரதேச செயலாளர் உதார நாணாயக்கார தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் சிலர் ஊடக சந்திப்பினை ஏற்பாடு செய்து கைது செய்யப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.

336 x 200 Sinhala

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி