1200 x 80 DMirror

 
 

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரரும் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் பொதுஜன பெரமுன உறுப்பினருமான ஜகத் சமந்த கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியினால் கட்டணம் செலுத்தப்பட்ட இரண்டு எரிபொருள் கப்பல்கள் எதிர்வரும் 23 அல்லது 24 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை 20 வீதத்தால் அதிகரித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் நாளை (20) முதல் இரண்டு வாரங்களுக்கு விரிவுரைகளை ஒன்லைனில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிடைக்கும் எரிபொருளை நாடளாவிய ரீதியில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண இலங்கைக்கு தமது அரசாங்கமும் பூரண ஆதரவை வழங்கும் என பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) உமர் பாரூக் புர்க்கி (Umar Farooq Burki) தெரிவித்துள்ளார்.

உணவு பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கான பொருத்தமான வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்து, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ஆலோசனை வழங்கியுள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை (20) முதல் இரண்டு வாரங்களுக்கு அரச அலுவலகங்களுக்கு ஊழியர்களை பணிக்கமர்த்துவதை மட்டுப்படுத்தி பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சினால் சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பை அறிவிப்பதற்கான திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை (17) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மே மாதம் 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற அமைதியின்மை சம்பவங்கள் தொடர்பில், இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், 38 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் இன்புளுவன்ஸா வைரஸ் தொற்று நோய் ஒன்று மிக வேகமாக பரவி வருகின்றது.

 

கலவானை பிரதேசத்தை அண்மித்து இந்த இன்புளுவன்ஸா நோய் வேகமாக பரவி வருவதாக சபரகமுவ மாகாண சுகாதார சேவை வைத்திய பணிப்பாளர் டொக்டர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரையான காலம் வரை இன்புளுவன்ஸா நோய் தாக்கத்தினால் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

 

ஏப்ரல் மாதத்தில் 11 நோயாளர்களும், மே மாதத்தில் 6 நோயாளர்களும், ஜுன் மாதத்தில் 103 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த நோய் தாக்கத்தினால் அதிகளவில் பெண்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.

நுகேகொட-தெல்கந்த சந்தியில் எரிபொருள் கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஹைலெவல் வீதியை மறித்து இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே, குறித்த வீதியில் பயணிக்கவுள்ள சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

336 x 200 Sinhala

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி