பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப, இன்று (15) முதல் பஸ்களை செவையில் ஈடுபடுத்துவதற்கு

நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வழக்கமான கால அட்டவணையின் கீழ் இன்றும் நாளையும் பஸ்கள் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் சேவை மேற்பார்வை பணிப்பாளர் ஷெரீன் அத்துகோரள தெரிவித்தார்.

நாளை மறுநாள் முதல், சொந்த ஊர்களுக்கு சென்ற பயணிகளின் வசதிக்காக விசேட பஸ் சேவை ஒன்று செயல்படுத்தப்பட உள்ளதாகவும் ஷெரீன் அத்துகோரள குறிப்பிட்டார்.

இதேவேளை, இன்று வழக்கமான அலுவலக நாளாக இருப்பதால், அலுவலக ரயில்கள் வழமை போல் இயக்கப்படவுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப குறித்த ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web