இலங்கைக்கு வழங்கப்படும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை GSP+ (Generalised Scheme of Preferences Plus)

தொடர்பாக மதிப்பீடு செய்யும் நோக்குடன், ஏப்ரல் மாத இறுதி பகுதியில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அந்த குழுவினர், அரச அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்தவுள்ளதாகவும், GSP+ சலுகையின் நிபந்தனைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் ஆடைத்தொழில்துறைக்கு GSP+ சலுகை மிகவும் முக்கியமானது, ஏனெனில் ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்கு 28வீத ஏற்றுமதி மேற்கொள்ளப்படுகின்றது.

GSP+ சலுகை தொடர்வதற்கு எதிர்க்கட்சியும் தங்கள் ஆதரவை வழங்கும் என்றும், தொழிற்சாலைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக இந்த சலுகை அவசியம் என்றும் பிரேமதாச வலியுறுத்தினார்.

அத்துடன், GSP+ சலுகையை தொடர்வதற்காக, தேவையான அனைத்துப் பன்னாட்டு உடன்படிக்கைகளை நிறைவேற்றி, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் அடுத்த பொருளாதார நிலையை தீர்மானிக்கும் முக்கியமான கலந்துரையாடல் இந்த ஐரோப்பிய ஒன்றிய குழுவின் வருகையாக இருக்கலாம் என்று பொருளாதார வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web