1200 x 80 DMirror

 
 

எதிர்வரும் திங்கட்கிழமை (13) குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய பிராந்திய அலுவலகங்கள் வழமை போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் இவ்வாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை நாளாந்தம் 100 வீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் (8) மாத்திரம் சுமார் 2,500 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பியூமி பண்டார அறிவித்துள்ளார்.

பசில் ராஜபக்ஸ இராஜினாமா செய்தமையினால், வெற்றிடமான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் ஆசனத்திற்கு பிரபல வர்த்தகரும் அமைச்சு ஒன்றின் முன்னாள் செயலாளருமான தம்மிக்க பெரேரா இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி அமைச்சின் செயலாளர் எம். சிறிவர்தன இன்று (10) இந்திய EXIM வங்கியுடன் டொலர் கடனைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

எதிர்வரும் 13 ஆம் திகதி அரசாங்க விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் மற்றும் கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி திங்கட் கிழமை விசேட அரசாங்க விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளரால் சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

அரச அலுவலகங்களுக்கு அன்றைய தினம் விசேட விடுமுறை தினமாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

இது அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதற்கு இடையூறாக இருக்கக் கூடாது எனவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

பொசன் பௌர்ணமி தினமான ஜூன் 14 ஆம் திகதி ஏற்கனவே அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை போக்க தமிழக முதல்வர் தலையிட்டு இந்தியாவில் சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் செல்வராசா கஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளது.

“இலங்கையில் நடந்த போர் காரணமாக உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பலர் வெளிநாடுகளுக்குச் சென்றனர். எனவே, இங்கிருந்து இந்தியா சென்றவர்களை சிறப்பு முகாம்களில் தங்க வைப்பதை ஏற்க முடியாது. தமிழக முதலமைச்சர் தலையிட்டு அவர்களை விடுவிக்கவும், அவர்கள் விரும்பினால் இலங்கைக்கு திரும்புவதற்கும் அல்லது அவர்கள் விரும்பவில்லை என்றால் இந்தியாவில் வாழவும் வசதி செய்து கொடுக்க வேண்டும்” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

கஜேந்திரன் யாழ் குடாநாட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் குறித்து தமிழக அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை.

குடிவரவு சட்டங்களை மீறி இந்தியாவுக்குள் நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் 104 இலங்கைத் தமிழர்கள் பல ஆண்டுகளாக தமிழக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் அல்லது கொன்றுவிட வேண்டும் என்று வலியுறுத்தி திருச்சி முகாமில் உள்ள 6 தமிழ் அகதிகள் கடந்த 20ம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதம் இருந்து ஆறு நாட்களுக்குப் பிறகு, தமிழ் அகதிகள் சிலர் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் உடல் நலக்குறைவு ஏற்பட்ட 17 பேரை கடந்த 6ம் திகதி முகாம் அதிகாரிகள் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஏனைய அகதிகள் முகாமில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், இலங்கையில் உள்ள மக்களுக்கு உணவளித்து உதவிய தமிழக முதல்வர் மு.கா. ஸ்டாலின், தமிழக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் செல்வராசா கஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு, சீன மற்றும் இந்திய தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.

மின்சார பொறியியலாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கையினால் பொதுமக்களுக்கு தொடர்ந்து மின்சார விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (09) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தம்மைக் கைது செய்வதை தடுக்கக் கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது இராஜினாமா கடிதத்தை கையளித்த பின்னர் பசில் ராஜபக்ஷ விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளார்.

இதேவேளை, பசில் ராஜபக்ச பதவி விலகினாலும் தனது அரசியல் நடவடிக்கைகளை தொடர்வார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜயந்த கெட்டகொடவின் இராஜினாமாவை அடுத்து பசில் ராஜபக்ஷ தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த 4 மாதங்களுக்கு தேவையான அரிசியை இறக்குமதி செய்யுமாறு விவசாய அமைச்சு, வர்த்தக அமைச்சுக்கு அறிவித்துள்ளது

336 x 200 Sinhala

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி