விசுவாவசு புத்தாண்டுப் பலன்கள்!
மேஷம்
அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை
குடும்பம்: சுக்கிரன், சனி, செவ்வாய், கேது ஆகிய நான்கு கிரகங்களும் உங்களுக்குச் சாதகமாக சஞ்சரிக்கும் நிலையில், இத்தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது! சித்திரை 18-ம் தேதி (1-5-2024) அன்று குரு பகவானும், உங்களுக்கு அனுகூலமாக மாறுகிறார்! இப்புத்தாண்டு முழுவதும் வருமானம் ஒரே சீராக இருக்கும். செலவுகள் கட்டுக் கடங்கியே இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் பெருகும். வரும் ஒரு வருட காலத்தில், நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளும் நிகழும். பல பெண்களுக்குக் கருத்தரிக்கும் யோகமும் அமைந்துள்ளது. ஐப்பசி 18-ம் தேதியிலிருந்து, கார்த்திகை 9-ம் தேதி வரை ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவேண்டுமென கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. திருமண முயற்சிகள் கைகூடும். சித்திரை மாதம் 7-ம் தேதியிலிருந்து, ஆவணி 9-ம் தேதி வரை திருமண முயற்சிகளுக்கு மிகவும் ஏற்ற காலகட்டமாகும். ஜனன கால கிரகநிலைகளின்படி, சிலருக்கு சொந்த வீடு அமையும் யோகமும் உள்ளது! வாய்ப்பைத் தவற விடாதீர்கள்!! இந்த ஆண்டு முழுவதும், ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.
உத்தியோகம்: லாப ஸ்தானத்தில், சனி பகவானும், தன ஸ்தானத்தில் குரு பகவானும் சுப பலம் பெற்றுத் திகழ்வதால், அனைத்து உத்தியோகஸ்தர்களுக்கும் பல நன்மைகள் காத்துள்ளன, இப்புத்தாண்டில்! அலுவலகச் சூழ்நிலை, மகிழ்ச்சியை அளிக்கும். சகக் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு, பணிகளில் உற்சாகத்தை ஏற்படுத்தும். மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். விரய ஸ்தானத்தில், ராகு நிற்பதால், கடின உழைப்பும், மேலதிகாரிகளின் கண்டிப்பும் கவலையை அளிக்கும். புதிய வேலைக்கு முயற்சித்துவரும் மேஷ ராசி அன்பர்களுக்கு, மனத்திற்குப் பிடித்த வேலை கிடைக்கும். வெளிநாடு சென்று பணியாற்றும் யோகமும் பலருக்கு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
தொழில், வியாபாரம்: மிகவும் அனுகூலமானதும், லாபத்தைப் பெற்றுக் கொடுக்கக்கூடியதுமான, இந்தக் குரோதி தமிழ்ப்புத்தாண்டு!! லாபம் ஒரே சீராக இருக்கும். பணப் பிரச்னை இருப்பதற்குச் சாத்தியக்கூறு இல்லை. ஆகஸ்ட் 18-ம் திகதியிலிருந்து, நவம்பர் 2-ம் தேதி வரை சகக் கூட்டாளிகளுடன் கருத்து வேற்றுமை ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. இக்காலகட்டத்தில், அனைவருடனும் அனுசரித்தும், விட்டுக்கொடுத்தும் நடந்துகொள்வது மிகவும் அவசியமாகும். சில தருணங்களில், நிதி நிறுவனங்களுடன் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாடுகளிலிருந்து, வரவேண்டிய பாக்கிகள் அதிகரிக்கும். முன்பணமின்றி, சரக்குகள் அனுப்புவதை இக்காலகட்டத்தில் கண்டிப்பாகக் குறைத்துக் கொள்ளவேண்டும் என்பதை கிரக நிலைகள், குறிப்பிட்டு எச்சரிக்கை செய்கின்றன. கூடியவரையில், புதிய முதலீடுகளையும், வியாபார விஸ்தரிப்புத் திட்டங்களையும் ஒத்திப்போடவேண்டிவரும்
கலைத் துறையினர்: ஆடி மாதம் 3-ம் வாரம் வரை, அனுகூலமான காலகட்டமாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வருமானம் உயரும். வசதிகள் பெருகும். திரைப்படத் துைறயினருக்கு, லாபகரமான நேரமிது! தயாரிப்பாளர்கள், புதிய படங்களைத் தயாரிப்பதில், மனத்தைச் ெசலுத்தலாம். வங்கிகளின் உதவி எளிதில் கிட்டும். அரசியல் தொடர்புகள், தக்க தருணத்தில், உதவும். ஜனன கால ஜாதகத்தில், சுக்கிரன், ராகு, செவ்வாய் ஆகிய மூவரும் சுப பலம் பெற்றிருப்பின், தீவிர அரசியலில் ஈடுபடலாம்.
அரசியல்துறையினர்: வரும் ஒரு வருடக் காலத்திற்கு, சுக்கிரன் மிகவும் அனுகூலமாக மாறுகிறார். அரசியல் துறை, சுக்கிரன் மற்றும் செவ்வாய், சனி ஆகிய மூவரின் அதிகாரத்தில்தான் உள்ளது! இம்மூவருமே சுப பலம் பெற்றுத் திகழ்கின்றனர். உங்களுக்கு இது ஓர் அரிய சந்தர்ப்பம்!! கிரக நிலைகளின்படி, மேலிடத் தலைவர்கள் உங்கள் மீது அளவற்ற நம்பிக்கை கொண்டுள்ளனர். ஜனன கால கிரக நிலைகளும், தற்கால தசா, புக்திகளும் அனுகூலமாக இருப்பின், தேர்தலில் வெற்றி பெறுவதுடன், அரசாங்கப் பதவியொன்றில் அமர்வதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன.
மாணவ – மாணவியர்: வைகாசி 11-ம் தேதியிலிருந்து, வித்யாகாரகரான புதன், உங்களுக்கு அனுகூலமாக வலம் வருகிறார். பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். படித்தவற்றை, தேர்வுகளில் நன்கு எழுதும் திறன் அதிகரிக்கும், நினைவாற்றல் மேலிடும். ஐப்பசி மாதத்தின் மூன்றாம் வாரத்திலிருந்து, உயர் கல்விக்கு நீங்கள் எதிர்பார்த்த உதவி கிட்டும்.
விவசாயத் துறையினர்: ஆவணி 10-ம் தேதியிலிருந்து, விவசாயத் துறைக்கு ஆதிபத்தியம் கொண்ட செவ்வாய், சுப பலம் பெறுவதால், நல்ல விளைச்சலும், வருமானமும் கிைடக்கும். மனதில் மகிழ்ச்சி மேலிடும். சந்தை நிலவரமும் உங்களுக்குச் சாதகமாக துணை நிற்கிறது. உங்கள் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் லாபம் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைத்து, நிம்மதி பெறவேண்டிய நேரமிது!
பெண்மணிகள்: இவ்வருடம் முழுவதும், உங்களுக்கு நன்மை செய்யும் கிரகங்களே, மற்ற கிரகங்களைவிட, அதிக சுப பலம் பெற்று வலம் வருகின்றன. குடும்பச் சூழ்நிலை மன நிறைவையளிக்கும். கணவர் மற்றும் குழந்தைகள் ஆகியோரின் பாசம் மன நெகிழ்வை ஏற்படுத்தும். வேலை பார்க்கும் பெண்மணிகளுக்கு, முன்னேற்றமான ஆண்டாகும், இந்தக் குரோதி தமிழ்ப் புத்தாண்டு!
அறிவுரை: சிக்கனமாகச் செலவு செய்து, எதிர்காலத்திற்கென்று சேமித்து வைத்துக்கொள்ள மிகவும் அனுகூலமான மாதமிது. இன்றைய சேமிப்பு நாளை துணை நிற்கும்!!
பரிகாரம்: ராகுவிற்குப் பரிகாரம் செய்வது, நன்மை செய்யும். சனிக்கிழமைதோறும் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் தீபத்தில் சிறிது எள் எண்ணெய் சேர்த்து வந்தால் போதும். பலன் கை ேமல் கிட்டும். அனுபவத்தில் காணலாம் இதை!
ரிஷபம்
கிருத்திகை 2ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் வரை
குடும்பம்: இவ்வருடம் முழுவதும், ராகு உங்களுக்கு அனுகூலமாக நீடிக்கிறார். ஜென்ம குருவினால், நன்மை ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை! கேது, சுக்கிரன், புதன் ஆகியோரும் சுப பலம் பெற்று சஞ்சரிக்கின்றனர்!! இந்தத் தமிழ்ப் புத்தாண்டாகிய குரோதி வருடம் முழுவதும், ஜீவனாதிபதியாகிய சனி பகவான், அவருடைய ஆட்சி வீட்டில் நிலைகொண்டிருக்கிறார். வருமானம் திருப்திகரமாக இருக்கும். இருப்பினும், வருமானத்திற்கேற்ற செலவுகளும் சற்று அதிகமாகவே இருக்கும். குடும்பப் பொறுப்புகள் சம்பந்தமாக அதிக அலைச்சல் இருக்கும். பூர்வ புண்ணிய, புத்திர ஸ்தானத்தில் கேது அமர்ந்திருப்பதால், தீர்த்த தல யாத்திரை ஒன்று சித்திக்கும் யோகமும் உள்ளது. விவாகம் சம்பந்தமான முயற்சிகளில் தடங்கல்களும், குழப்பங்களும் மேலிடும். அவற்றின் காரணமாக, வரன் அமைவதும் தாமதப்படும். பழைய கடன்களினால், கவலை உண்டாகும். உஷ்ண சம்பந்தமான உடல் உபாதைகள், ஆரோக்கியத்தைப் பாதிக்கும். குடும்பப் பொறுப்புகள் சம்பந்தமாக, அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடும்.
உத்தியோகம்: லாப ஸ்தானத்தில் ராகுவும், ஜீவன ஸ்தானத்தில் சனி பகவானும், ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து இருப்பது, வேலையில் சிறந்த யோக பலன்கள் கிடைக்கவிருப்பது, மேலதிகாரிகளும், சக-ஊழியர்களும் ஒத்துழைப்பார்கள். இதுவரை எவ்விதக் காரணமுமில்லாமல், நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு, பதவியுயர்வு ஆகியவை இனி கிடைப்பதற்கு ஆதரவாக உள்ளனர், சம்பந்தப்பட்ட கிரகங்களின் சஞ்சார நிலைகள்! வெளி நாடு சென்று, பணியாற்ற விருப்பமிருப்பின், தற்போது முயற்சிக்கலாம். இருப்பினும், ராகுவின் நிலையினால், இடைத்தரகர்களை நம்பாமலிருப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில், விரும்பத்தகாத சூழ்நிலையிலும், நிறுவனத்திலும் உங்களைச் சேர்த்துவிடுவதற்கு சாத்தியக்கூறு உள்ளது – கிரக நிலைகளின்படி!
தொழில், வியாபாரம்: அனைத்து தொழில் மற்றும் வர்த்தகத் துறைகளுக்கும் சனி பகவான்தான் அதிபதி! உங்கள் ராசிக்கு ஜீவனாதிபதியும் அவரே! கோள்சார விதிகளின் படி, சுப பலத்துடன் அவர் சஞ்சரிப்பதால், நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் பெற்றுத் தருவார். ஆயினும், அலைச்சலும், ஓய்வில்லாத உழைப்பையும், பிற மாநிலங்களுக்குப் பயணமும் தவிர்க்க இயலாதவை!! சில தருணங்களில், நிதி நிறுவனங்களினால், சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். சில்லரை வியாபாரிகள், கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும்.
கலைத்துறையினர்: புத்தாண்டில், முதல் ஏழு மாதங்கள் – அதாவது, ஐப்பசி முடியும் வரை கிரக நிலைகள் உங்களுக்கு மிகவும் அனுகூலமாக சஞ்சரிக்கின்றனர். வருமானம் போதிய அளவிற்கு இருக்கும். குறிப்பாக, திரைப்படத் துறையினருக்கு, லாபகரமான காலகட்டமாகும். புதிய படங்கள் மகத்தான வெற்றியடையும். மக்களிடையே புகழ் ஓங்கும்.
அரசியல்துறையினர்: சுக்கிரன் மட்டுமல்ல! அரசியல் துறைக்குத் தொடர்பு கொண்டுள்ள அனைத்து கிரகங்களும், சுப பலம் பெற்றுத் திகழ்வதால், அரசியலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கட்சியில், ஆதரவு பெருகும். வரவிருக்கும் தேர்தலில் பொறுப்புள்ள பதவியொன்று வகிக்க நேரிடும்.
மாணவ – மாணவியர்: கல்விக்கு அதிபதியான புதன், இந்தப் புத்தாண்டில் ஓரளவே சாதகமாக வலம் வருகிறார்! பல தருணங்களில், வீரியம் நிறைந்த கிரகங்களுடன் இணையவேண்டிய அவசியம் உருவாகியுள்ளது, இப்புத்தாண்டில்! அத்தகைய தருணங்களில், புதன் தனது பலத்தை இழப்பதாக ஜோதிடக் கலை விவரித்துள்ளது. ஆதலால், மாணவ மணிகளுக்கு கல்வி முன்னேற்றம் ஒரே சீராக இருக்கும், இப்புத்தாண்டில்! ஆயினும், பின்னடைவு சிறிதும் இராது!! விளையாட்டுகள், போட்டிகள் ஆகியவற்றிலும், எளிதில் வெற்றி கிட்டும்.
விவசாயத் துறையினர்: இப் புத்தாண்டில், மேகங்களுக்கு அதிபதியாக விளங்குகிறார், சனி பகவான்! அவர், இந்தாண்டு முழுவதும், தனது ஆட்சிப் பீடமாகிய கும்ப ராசியில் வீற்றிருக்கிறார். ஆதலால், விவசாயத் துறையினருக்கு, இந்தத் தமிழ்ப் புத்தாண்டில் தண்ணீர்ப் பற்றாக்குறை சிறிதும் இராது. சில தருணங்களில் தேவைக்கு அதிகமாகவே மழை பொழியக்கூடும். இதர வசதிகளும், குறைவில்லாது கிடைக்கும். அரசாங்கச் சலுகைகள் தக்க தருணத்தில் கிட்டும். சந்தையில் நல்ல லாபம் கிடைக்கும்.
பெண்மணிகள்: சுக்கிரன், பூரண சுப பலம் பெற்றுத் திகழ்கிறார். ஆயினும், குரு பகவான் ஜென்ம ராசியில்தான் சஞ்சரிக்கிறார். குடும்பச் சூழ்நிலையில், சிறு சிறு பிரச்சினைகளும், ஒற்றுமையின்மையும் கவலையை அளிக்கும். வேலை பார்க்கும் பெண்மணிகளுக்கு, அனுகூலமான ஆண்டு இது! திருமணத்திற்குக் காத்திருக்கும் பெண்களுக்கு, வரன் அமைவதில் சிறு தடங்கல் ஏற்பட்டு, அதன் பிறகு வரன் நிச்சயமாகும். வேலையில்லாத பெண்களுக்கு, சிறு முயற்சியிலேயே நல்ல வேலை கிடைக்கும்.
அறிவுரை: அனைவரிடமும் சற்று அனுசரித்து நடந்துகொள்ளுங்கள். உணர்ச்சிவசப்படுதல், முன் கோபம் ஆகியவை கண்டிப்பாகக் கூடாது.
பரிகாரம்: ஜென்ம ராசி குருவுக்கு மட்டும் பரிகாரம் செய்தால் போதும். வியாழக்கிழமைகளில் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் மாலையில் நெய் தீபம் ஏற்றி வந்தால் போதும். இத்தீபத்தில் சக்தியைப் பற்றி மிகப் புராதனமான ஜோதிடக் கிரந்தங்கள் அற்புதமாக விவரித்துள்ளன. அனைத்து தேவதைகளும்,” சந்தியாக் காலம்” எனவும், “பிரதோஷ காலம்” எனவும் போற்றப்படும் மாலை நேரத்தில், பக்தர்கள் கேட்பதை மறுக்காமல் கொடுத்தருள்வார்கள் என அந்நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது.
மிதுனம்
மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் வரை
குடும்பம்: கோள்சார விதிகளின்படி, சூரியன், குரு மற்றும் புதன் ஆகியோர் மட்டும்தான் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கின்றனர், இப்புத்தாண்டின் ஆரம்பத்தில்! சுக்கிரன், சனி உள்ளிட்ட மற்ற கிரகங்கள் அனுகூலமாக இல்லை!! வரவும், செலவும் சமமாகவே இருக்கும். ஆடி மாதம் 11-ம் தேதியிலிருந்து, ஐப்பசி 12-ம் தேதி வரை பண நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் என கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. திட்டமிட்டு செலவு செய்து வந்தால், கடன் வாங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படாது. ெநருங்கிய உறவினர்களிடையே பரஸ்பர அந்நியோன்யம் குறையும். திருமண முயற்சிகளில், தடங்கல்கள் ஏற்படும். சில தருணங்களில், தவறான வரனை நிச்சயித்துவிடும் தவறு ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. எச்சரிக்கை அவசியம். குழந்தைகளின் எதிர்காலம் பற்றியும் கவலை ஏற்படும். வெளியூர்ப் பயணங்களின்போது, விலையுயர்ந்த பொருட்களையும், உத்தியோகம் சம்பந்தமான ஆவணங்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். அதிக அலைச்சலால், ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது.
உத்தியோகம்: வேலை பார்க்கும் இடத்தில் கவனமாக இருத்தல், வரும் ஓராண்டுக் காலத்திற்கு மிகவும் அவசியமாகும். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது, முன்கூட்டியே அறிந்துகொள்வதற்காக மட்டுமே ஜோதிடக் கலை உள்ளது என சிலர் நினைப்பது சரியல்ல! குறிப்பிட்ட கிரக நிலைகள் சேரும்போது, நாம் என்ன செய்ய வேண்டும்? எப்படி நடந்துகொள்ள வேண்டும்? எத்தகைய அம்சங்களில் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பனவற்றை, நமக்கு அறிவூட்டி, நம்மைப் பாதுகாக்கிறது “ேஜாதிடக் கலை”. சக ஊழியர்களுடன் சற்று அனுசரித்து நடந்துகொள்ளுங்கள். மேலதிகாரிகளுடன் பழகும்போதும், பேசும்போதும் எச்சரிக்கையுடன் இருப்பது எத்தகைய அவசியம் என்பதை ஜோதிடக் கலை விவரிக்கிறது.
தொழில், வியாபாரம்: போட்டிகள் அதிகரித்தாலும், உங்கள் திறமையினால், அவற்றை முறியடித்து, உங்கள் விற்பனையைப் பாதுகாத்துக் கொள்வீர்கள் என கிரக நிலைகள் தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. வியாபாரத்தை அதிகரிப்பதற்காக ஏற்கும் வெளியூர்ப்பயணங்கள் லாபகரமாக இருக்கும். பிற தொழிலதிபர்களுடன் கூட்டுத் தொழில் கையெழுத்தாகும். விற்பனை நிலையங்களை அதிகரிப்பதற்கு மிகவும் அனுகூலமான புத்தாண்டு இது! ஏற்றுமதித் துறையினருக்கு, நிதி நிறுவனங்களின் பொருளுதவியும், ஒத்துழைப்பும் கிடைக்கும்.இறக்குமதித் துறையினருக்கும், புதிய வாய்ப்புகள் உருவாகி அதன் காரணமாக லாபம் உயரும். சந்தை நிலவரம் சாதகமாக மாறும்.
அரசியல்துறையினர்: அரசியல் துறைக்கு, சம்பந்தப்பட்ட கிரகங்கள், சுப பலம் பெற்று வலம் வருவதால், இவ்வருடத்தில், உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கவுள்ளது. மேல்மட்டத் தலைவர்கள், உங்கள் மீது அளவற்ற நம்பிக்கையும், மதிப்பும் கொண்டுள்ளதை குறிப்பிட்டுக் காட்டுகின்றன. சிலருக்கு, கட்சிமாற்றம் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளது. அந்த மாற்றம், நன்மையைத் தரும். சூரியன் அனுகூலமாக இருப்பதால், செல்வாக்குள்ள பிரமுகர் ஒருவரின் தொடர்பும், அதன் காரணமாக, உங்கள் அரசியல் வாழ்க்கையில் ஓர் மிகச் சிறந்த திருப்பமும் உண்டாகும்.
மாணவ – மாணவியர்: கிரக நிலைகளின்படி, மிதுன ராசி மாணவ, மாணவியருக்கு, மாசி மாதம் 27-ந் தேதி வரை கல்வியில் மிக நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாசி 28-ந் தேதியிலிருந்து, படிப்பில் சிறிது பின்னடைவு ஏற்படக்கூடும் என்பதை கிரக நிலைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. அப்போது, சிறிய அளவில் ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டு, எளிய சிகிச்சையினால் குணமும் ஏற்படும். நேர்முகத் தேர்வுகள் இருப்பின், மிகத் தெளிவாக, பதிலளிக்கும் திறன் ஓங்கும். கூடிய வரையில், வெளியில் அலைவதைக் குறைத்துக் கொள்வது நல்லது.
விவசாயத் துறையினர்: வயல் பணிகள் சற்று கடுமையாகவே இருக்கும். கால்நடைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதால், பணம் விரயமாகும். பழைய கடன்கள், கவலையை அளிக்கும். அண்டை நிலத்தாரோடு பகையுணர்வு மேலிடும். நவீன விவசாயக் கருவிகள் கிடைப்பதில் தடங்கல்கள் ஏற்படும்.
பெண்மணிகள்: குடும்ப நிர்வாகத்தை ஏற்றுள்ள பெண்மணிகளுக்கு, சற்று சிரமமான ஆண்டாகும். குறைந்த வருமானத்திற்குள், குடும்பச் செலவுகளைச் சமாளிப்பது மிகவும் சிரமமாக இருக்கும். ஸப்தம ஸ்தானத்திற்கு, சிறிது தோஷம் ஏற்பட்டுள்ளதால், கணவர் – மனைவியரிடையே ஒற்றுமை குறையும். அதனால், மன நிம்மதி பாதிக்கப்படும். உடல் நலனிலும், சற்று கவனமாக இருத்தல் நல்லது. வேலைக்குச் சென்று வரும் பெண்மணிகளுக்கு, அலுவலகச் சூழ்நிிலை நிம்மதியைத் தந்தாலும், பணிச் சுமை சக்திக்கு மீறியதாக இருக்கும். வெளிநாடுகளில் பணியாற்றிவரும் பெண்களுக்கும், இது பொருந்தும். திருமணத்திற்குக் காத்துள்ள நங்கையருக்கு, வரன் அமைவதில் சிறு சிறு பிரச்னைகளால், தாமதமாகும்!
அறிவுரை: எந்தக் காரியமானாலும், சற்று சிந்தித்து செய்யுங்கள். பிறருடன் பேசும்போதும், பழகும்போதும், நிதானமாக இருத்தல் அவசியம்.
பரிகாரம்: ஒரு முறை சூரியனார்க் கோயிலுக்குச் சென்று, ஒன்பது நவக்கிரகங்களுக்கும், நெய் தீபம் ஏற்றிவைத்து, தரிசித்துவிட்டு வந்தால் போதும். சக்தியுள்ள பரிகாரம் இது! சூரியனார்க் கோயிலுக்குச் செல்ல முடியாதவர்களுக்கு, உங்கள் வீட்டிற்கு அருகாமையிலுள்ள திருக்கோயில் ஒன்றில் மூன்று வெள்ளிக்கிழமைகள், மாலை நேரத்தில் மூன்று அகல் விளக்குகளில் பசு நெய் தீபம் ஏற்றி தரிசித்துவிட்டு வந்தாலே போதும்.
கடகம்
புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை
குடும்பம்: இப்புத்தாண்டு முழுவதும் குருவும், ராகுவும் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கின்றனர்! மற்ற கிரகங்களால், அனுகூலம் ஏதும் இல்லை!! வருமானம் ஒரே சீராக இருக்கும். குடும்பச் சூழ்நிலை, மன நிறைவையளிக்கும். ஒற்றுமை நிலவும். சிறு சிறு சுப நிகழ்ச்சிகளுக்கும் சாத்தியக்கூறு உள்ளது. இருப்பினும், மிக முக்கியமான கிரக சஞ்சார நிலை அஷ்டம ஸ்தானத்தில் (8-ம் இடம்) சனி, செவ்வாய் இணைந்திருப்பதேயாகும்! உடல் நலனில் கவனம் அவசியம். குறிப்பாக, இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும்போது, அதிஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை, ஜோதிடக் கலை வற்புறுத்திக் கூறுகிறது. ராகு மற்றும் சனி ஆகிய இரு கிரகங்களுக்கும் இரவில்தான் தீவிர சக்தியும், ஆதிக்கமும் இருப்பதாக மிகப் புராதனமான ஜோதிட நூல்கள் அனைத்திலும் விவரிக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மையான விபத்துகள் இரவு நேரத்தில்தான் நிகழ்கின்றன. அதற்குக் காரணம், ராகு மற்றும் செவ்வாய், சனி ஆகிய கிரகங்களின் இரவு நேர சஞ்சார நிலைதான் காரணம்!! இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது, இரவு நேரத்தில் நிகழ்ந்த உயிரிழப்புகள், பகல் நேரத்தைவிட பல மடங்கு அதிகம் என்பதை நேச நாடுகள் வெளியிட்டுள்ள போர் அறிக்கை கூறியுள்ளது. தேவையில்லாமல், வெளியில் அலைவது, தரக் குறைவான உணவகங்களில் உணவருந்துவது, இரவு நேரத்தில் தனியே செல்வது, வாகனம் ஓட்டும்போது, நிதானமாக ஓட்டுதல் ஆகியவை அவசியம்.
உத்தியோகம்: உத்தியோகத் துறை, சனி பகவானின் அதிகாரத்தில்தான் உள்ளது. இவ்வாண்டு முழுவதும், அவர் அனுகூலமாக இல்லை. மேலும், பாக்கிய ஸ்தானத்தில் நிலைகொண்டுள்ள ராகுவும், சாதகமாக இல்லை! அலுவலகப் பணிகளிலும், பொறுப்புகளிலும், ஜாக்கிரதையாக இருத்தல் அவசியம். கிரக நிலைகளின்படி, மேலதிகாரிகளுடன் கருத்துவேற்றுமை ஏற்படக்கூடும். அத்தகைய சந்தர்ப்பங்களில், நிதானத்தை இழந்துவிடாமல், சமயோஜிதமாக நடந்துகொள்வது, வேண்டாத பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும். பணிகளில் மிகக் கவனமாக இருந்தும்கூட, சிறு தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. சொந்தப் பிரச்னைகளும், குடும்பக் கவலைகளும், உங்கள் கடமைகளைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்!
தொழில், வியாபாரம்: மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய புத்தாண்டு இது!! குறிப்பாக, பண விஷயங்களில் கண்டிப்பு வேண்டும்! கடனுக்கு சரக்குகளை அனுப்பினால், பணம் வருவது கடினமே. மேலும், தேவையில்லாமல் வங்கி போன்ற நிதிநிறுவனங்களிலிருந்து, கடன் வாங்குவதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். தொழில் விஸ்தரிப்புத் திட்டங்களை ஒத்திப்போடுதல் அவசியம். ஏற்றுமதி – இறக்குமதித் துறையினர் சந்தை நிலவரத்தைத் தீர ஆராய்ந்து பார்த்த பின்னரே, புதிய ஆர்டர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், ஆவணி 7-ம் தேதியிலிருந்து ஐப்பசி முடியும் வரை கிரகங்களின் சஞ்சார நிலை அனுகூலமாக இல்லை!! நஷ்டம் ஏற்படக்கூடும். சகக் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைப்பதும், கடினம்தான். அவர்களால், புதுப்புதுப் பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும்.
கலைத்துறையினர்: இப் புத்தாண்டில், கிரக நிலைகள் ஓரளவே அனுகூலமாக உள்ளன. பெரும்பான்மையான கிரகங்கள் சாதகமாக இல்லை. வருமானம் சற்றுக் குறையும். உள்ளதை வைத்து சமாளிக்கவேண்டிய நிலைதான்!! திரைப்படத் தயாரிப்பாளர்கள், புதிய படங்கள் எடுப்பதற்கு முன், தீர சிந்தித்துப் பார்த்து முடிவெடுப்பது மிகவும் அவசியம் என்பதை கிரக நிலைகள் உணர்த்துகின்றன. நடிக – நடிகைகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். அரசியல் தொடர்புகள் உங்கள் செல்வாக்கைப் பாதிக்கும்.
அரசியல்துறையினர்: சுக்கிரன், செவ்வாய் மற்றும் சனி ஆகிய மூவரும் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் நிலைகொண்டுள்ளனர். “உடன்பிறந்தே கொல்லும் வியாதி!! மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்!!” என்ற மூதுரைக்கு ஏற்ப, கட்சியில் நெருங்கிப் பழகியவர்களே உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு, மனத்திற்குள் பொங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை கிரக நிலைகள் தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தற்போதுள்ள கிரக நிலைகளின்படி, எவரையும் முழுமையாக நம்பிவிடவேண்டாம். தனியே வெளிச் செல்வதையும் தவிர்ப்பது நல்லது. உங்கள் திறமையே உங்களுக்கு எதிரியாக உள்ளது. பொதுமக்களிடையே செல்வாக்கு உயர்ந்துள்ளது.
மாணவ – மாணவியர்: இப்புத்தாண்டு முழுவதும், கிரகங்கள் ஓரளவே நன்மை செய்யும் நிைலகளில் நிலைகொண்டுள்ளனர். மனதைப் பாடங்களில் செலுத்துவது, சற்று சிரமமாக இருக்கும். புத்தகத்தைக் கையில் எடுத்தாலே உறக்கமும், சோம்பலும் மேலிடும். விடுதியில் தங்கி, படித்து வரும் மாணவ – மாணவியருக்கு, பணப் பிரச்னை கவலையளிக்கும். பிற மாணவ – மாணவியருடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில், கிரகங்களின் சஞ்சார நிலைப்படி, உங்கள் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆதலால்தான், இந்த அறிவுரை!
விவசாயத் துறையினர்: உழைத்த அளவிற்கு விளைச்சல் இருப்பது சற்று சிரமம்தான்! அஷ்டம ராசி தோஷத்தினால், இரவு நேர வயல் பணிகளில் விழிப்புடன் செயல்படுவது மிகவும் அவசியம். சிறு விபத்துகள் ஏற்படக்கூடும். விஷ ஜந்துக்களாலும் பாதிக்கப்படுவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன. இத்தகைய கிரக நிலைகளின்போது, புதிய கடன்களை ஏற்பது, எதிர்காலத்தில் பகையை ஏற்படுத்தக்கூடும்,
பெண்மணிகள்: உங்கள் உடல் நலன் மீது கவனமாக இருத்தல் மிகவும் அவசியம் என்பதை சனி மற்றும் செவ்வாயின் சேர்க்கை எடுத்துக்காட்டுகிறது. உஷ்ண சம்பந்தமான பிணிகளால் பாதிப்பு ஏற்படக்கூடும். சிறு உடல் பிரச்னை என்றாலும், அதனை அலட்சியம் செய்யாமல், மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியம். தேவையற்ற, கற்பனையான கவலைகளைத் தவிர்த்தல் வேண்டும்.
அறிவுரை: பணப் பிரச்னை, குடும்பக் கவலைகள், ஆரோக்கியக் குறைவு ஆகியவை உங்கள் உடல் நலனைப் பாதிக்கக்கூடும். நேரத்தில் உண்பது, உறங்கச் செல்வது, ஓய்வு, கடின உழைப்பைத் தவிர்த்தல் ஆகியவை மிக மிக அவசியமானவை.
பரிகாரம்: தினமும் அருகிலுள்ள ஆலய தரிசனம் செய்வதால் அஷ்டம ஸ்தான தோஷத்தைக் கண்டிப்பாகக் குறைத்துவிடும்.
சிம்மம்
மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை
குடும்பம்: சித்திரை 17-ம் (30-4-2024) தேதி வரை குரு பகவான், உங்களுக்கு அனுகூலமாக நிலைகொண்டிருப்பதால், குடும்பத்தில் மன நிறைவும், மகிழ்ச்சியும் நிலவும். அதன் பிறகு, இப்புத்தாண்டு முழுவதும், சுக்கிரனின் ராசியான ரிஷபத்திற்கு மாறி, உங்கள் ராசிக்கு வாக்கு, தனம், குடும்பம் மற்றும் சுகம், ருண, ரோக, சத்ரு ஸ்தானம் ஆகிய இடங்களை, தன் சுகப் பார்வையினால், தோஷத்தை அகற்றிவிடுகிறார். வருமானம் தேவையான அளவிற்கு இந்தப் புத்தாண்டு முழுவதும் இருக்கும். வீண் செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். களத்திர ஸ்தானத்தில், சனி – செவ்வாய் கூட்டுச் சேர்க்கை ஏற்பட்டுள்ளதால், மனைவியின் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் அவசியம். ஜோதிடம் என்பது, எதிர்காலத்தைப் பற்றி அறிந்துகொள்வதற்காக மட்டுமே ஏற்பட்டுள்ள கலை என நினைப்பது தவறாகும். குறிப்பிட்ட கால கட்டங்களில் நாம் என்ன செய்ய வேண்டும்? எவற்றைத் தவிர்க்க வேண்டும்? என வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகும், ஜோதிடம்! திருமண முயற்சிகளில், சிறு பிரச்னைகள் ஏற்பட்டு, அதன் பின்பு நல்ல வரன் அமையும். செவ்வாயின் நிலை காரணமாக, சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. வெளியூர்ப் பயணங்கள் வெற்றிகரமாக அமையும். நெருங்கிய உறவினர் ஒருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டு, மன நிம்மதி பாதிக்கப்படும். எத்தகைய நிலையிலும், உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்த்தல் அவசியம்.
உத்தியோகம்: சித்திரை 17-ம் (30-4-2024) தேதி வரை குரு பகவான், ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் நிலைகொண்டிருப்பதால், அலுவலகச் சூழ்நிலை மன நிறைவையளிக்கும். சக உத்தியோகஸ்தர்கள் ஒத்துழைப்பார்கள். மேலதிகாரிகளின் ஆதரவு, பணிகளில் உற்சாகத்தையளிக்கும். சித்திரை 18-ம் தேதி (1-5-2024) குரு ரிஷப ராசிக்கு மாறுவதால், வேலைபார்க்குமிடத்தில், பிரச்னைகள் ஏற்படும். பணிகளில் மிகவும் கவனமாக இருத்தல் அவசியம். “நண்பர்களே எதிரிகளாவர்!” எனக் கூறுகிறது, “ஜோதிட ரத்னாகரம்” எனும் புராதன ஜோதிட கிரந்தம்! வேலையில் சுணக்கம் ஏற்படும். உற்சாகம் குறையும். ஆதலால், சக ஊழியர்களுடன் பழகுவதில், ஜாக்கிரதையாக இருத்தல் மிகவும் அவசியம்.
தொழில், வியாபாரம்: வர்த்தகத் துறைக்கு அதிகாரம் கொண்ட கிரகங்கள் இவ்வருடம் முழுவதும் ஓரளவே சுப பலம் பெற்றுள்ளன. ஆதலால், விற்பனையும், லாபமும் ஒரே சீராக இருக்கும். நியாயமற்ற போட்டிகளை முறியடிக்கும் திறமையை சனி பகவான் தந்தருள்வார்! ஆயினும், அஷ்டம ஸ்தானத்தில் (8-ம் இடம்) நிலைகொண்டுள்ள ராகுவினால், சந்தை நிலவரம் சாதகமாக இராது. எதிர்பார்க்கும் அளவிற்கு விற்பனை இராது. நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பும் குறையும். வெளியூர்ப் பயணங்கள் பெரிய லாபத்தைப் பெற்றுத் தராது. இந்நிலை ஆனி 4-ம் (18-6-2024) தேதிவரை நீடிக்கிறது. ஆனி 5-ம் தேதியிலிருந்து, வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பிக்கும். படிப்படியாக லாபமும் உயரும். இந்த முன்னேற்றம் ஆண்டு முடியும் வரை நீடிக்கிறது. இத்தருணத்தில், உங்கள் பொருளாதார நிலையை சீர்செய்துகொள்ள சிறந்த தருணமாகும்.
கலைத்துறையினர்: இப்புத்தாண்டில் பெரும்பான்மையான கிரக நிலைகள் உங்களுக்குச் சாதகமாக இல்லை! சிறிய காரியமானாலும், அதிகமாக அலைய வேண்டியிருக்கும். வருமானம் தேவைக்கு சற்று குறைவாகவே இருக்கும். எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் ஏமாற்றத்தையளிக்கும். திரைப்படத் துறையினர் அளவோடு நன்மையடைவார்கள். தயாரிப்பாளர்கள், குறைந்த அளவில் முதலீடு செய்து, தரத்தில் உயர்ந்த கருத்துகளைக் கொண்ட படங்களை எடுப்பது அவசியம். ஏனெனில், நிதிநிறுவனங்களின் உதவி அளவோடுதான் கிடைக்கும், இப்புத்தாண்டில்!
அரசியல்துறையினர்: கட்சியில் ஆதரவு மேலோங்கும். மேல்மட்டத் தலைவர்களின் ஆதரவு கிட்டும். மனதில் தெளிவும், தன்னம்பிக்கையும் ஏற்படும். ஜனனகால கிரக நிலைகள் சாதகமாக இருப்பின், முக்கிய பதவியொன்றை ஏற்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளது.
மாணவ – மாணவியர்: புத்தாண்டின் ஆரம்பத்தில் இருந்து, புரட்டாசி 19-ம் (5-10-2024) தேதி வரை கல்விக்கு அதிபதியான கிரகங்கள் சுப பலம் பெற்றுத் திகழ்கின்றன. கல்வியின் சிறந்த முன்னேற்றத்தை அளிக்கக்கூடிய காலகட்டம் இது! மனம் படிப்பில் தீவிரமாக ஈடுபடும். பாடங்களைப் புரிந்துகொள்ளும் ஆற்றலும் மேம்படும். நேர்முகத் தேர்வுகளில் தெளிவான பதில்களைக் கூறி, வெற்றிக் கனியை எளிதில் பறித்துவிடுவீர்கள்!! புரட்டாசி 20-ம் (6-10-2024) தேதியிலிருந்து, கல்வி முன்னேற்றம் சாதாரணமாக இருக்கும்.
விவசாயத் துறையினர்: விவசாயத் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள கிரகங்கள் ஓரளவு சுப பலம் பெற்றுள்ளன. விளைச்சல் எதிர்பார்க்கும் அளவிற்கு இருக்கும். இந்த ஆண்டின் மேகாதிபதி சனி பகவானாக இருப்பதால், தேவைக்குச் சற்று அதிகமாகவே மழை பொழியும். கால்நடைகளின் பராமரிப்பில் பணம் செலவழியும். பழைய கடன்கள் நீடிக்கின்றன.
பெண்மணிகள்: புத்தாண்டின் பெரும் பகுதியில் சுக்கிரன் உங்களுக்குச் சாதகமாகவே சஞ்சரிக்கின்றார். இருப்பினும், குரு பகவான் சித்திரை 17-ம் (30-4-2024) தேதி வரைதான் அனுகூலமாக சஞ்சரிக்கின்றார். அதன் பிறகு, அவரால் நன்மை எதையும் எதிர்பார்க்க இயலாது வருடம் முடியும் வரை! இருப்பினும், சுக்கிரனின் சஞ்சார நிலை சுப பலம் பெற்றிருப்பதால், ஓரளவு சரிசெய்ய முடிகிறது. குடும்ப நிர்வாகத்திற்கு அளவோடுதான் வருமானம் இருக்கும். வீண் செலவுகளில் பணம் விரயமாகும். வேலை பார்க்கும் பெண்மணிகளுக்கு, அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். திருமணத்திற்குக் காத்திருக்கும் வனிதையருக்கு, வரன் அமைவதில் தடங்கல்கள் உண்டாகும்.
அறிவுரை: கைப் பணத்தை சிக்கனமாக எண்ணி எண்ணிச் செலவழியுங்கள். உறவினர்கள், நண்பர்கள் எவருடனும் உங்கள் சொந்தப் பிரச்னைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். வருடம் முழுவதும் சனி பகவானும், ராகுவும் அனுகூலமாக இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!
பரிகாரம்: சனிக்கிழமைகள்தோறும், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிலோ அல்லது உங்கள் வீட்டுப் பூஜையறையிலோ மாலையில் 5.30 மணி முதல், 7.30 மணிக்குள் ஐந்து நல்லெண்ணெய் தீபங்கள் ஏற்றி வந்தால், தோஷம் நீங்கி, குடும்பத்தில் சுபிட்சம் பெருகும்.
கன்னி
உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை
குடும்பம்: சனி பகவான், செவ்வாய், குரு ஆகிய கிரகங்கள் கன்னி ராசியினருக்கு, மிகவும் அனுகூலமான நிலைகளில் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு முழுவதும் சஞ்சரிக்கின்றனர். வருமானம் போதுமான அளவிற்கு இருக்கும். குடும்பத்தில், உபநயனம், நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நிகழும். இவற்றால், சுபச் செலவுகள் அதிகமாக இருப்பினும், சமாளிப்பதில், எவ்விதப் பிரச்னையும் இராது. திருமண முயற்சிகள் கைகூடும். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் மனதிற்கு நிம்மதியை அளிக்கும். வழக்குகள் இருப்பின், வெற்றியடையும். ஒருசிலருக்கு, இப்புத்தாண்டில் சொந்த வீடு அமையும் பாக்கியமும் இருப்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
உத்தியோகம்: ஜீவன காரகரான செவ்வாயும், இதர சம்பந்தப்பட்ட கிரகங்களும், சுப பலம் பெற்றுள்ளன. ஆதலால் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை பார்க்கும் இடத்தில், மேலதிகாரிகளின் ஆதரவும், சக-ஊழியர்களின் ஒத்துழைப்பும் பணிகளில் உற்சாகத்தை அதிகரிக்கும். தற்காலிகப் பணியாளர்களின் பணி நிரந்தரமாகும். வெளிநாடு சென்று, வேலை பார்க்க வேண்டுமென்ற ஆர்வமிருப்பின், இப்புத்தாண்டில் முயற்சிக்கலாம். வெற்றி கிட்டும். உத்தியோகம் காரணமாக, வெளிநாடுகளிலோ அல்லது வெளி மாநிலங்களிலோ பிரிந்திருந்த கணவர் – மனைவி, பிள்ளை அல்லது பெண் மீண்டும் ஒன்றுசேர்வர். இதனால், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
தொழில், வியாபாரம்: சம்பந்தப்பட்ட கிரகங்கள் ஐப்பசி 20-ம் (06-11-2024) தேதி வரை நல்ல முன்னேற்றம் ஏற்படும். விற்பனையும், லாபமும் படிப்படியாக உயர்வதை அனுபவத்தில் காணலாம். புதிய விற்பனை நிலையங்களை ஆரம்பிப்பதற்கு ஏற்ற ஆண்டு இது! துபாய், அபுதாபி, கத்தார் போன்ற வளைகுடா நாடுகளில் கிளைகளை ஆரம்பிப்பதற்கு கிரக நிலைகள் சாதகமாக உள்ளன. உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு, இப்புதிய கிளைகள் உதவிகரமாக இருக்கும் என்பதை கிரக நிலைகள் உறுதி செய்கின்றன. நிதி நிறுவனங்களின் உதவி எளிதில் கிட்டும். ெவளிநாடுகளின் அரசு அதிகாரிகள், ஆதரவு அளிப்பார்கள். விற்பனையும் லாபமும் படிப்படியாக உயரும். சிலர் இது சம்பந்தமாக வெளிநாடு சென்று வரும் வாய்ப்புகள் உள்ளதையும் கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
கலைத்துறையினர்: கலைத்துறைக்கு அஸ்திவாரம் எனக் கருதும் சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள், இப்புத்தாண்டின் பிற்பகுதியில் ஆதரவாக சஞ்சரிக்கின்றனர். புதிய வாய்ப்புகள் வருமானத்தை உயர்த்தும். பல மாதங்களாக நிதி நெருக்கடியை அனுபவித்து வந்த உங்களுக்கு, விடிவுகாலம் வந்துவிட்டது எனக் கூறலாம். திரைப்படத் துறையினர், கார்த்திகைமாதம் 7-ம் (22-11-2024) தேதிக்குப் பிறகு, புதிய தயாரிப்புகளில் ஈடுபடலாம். வெற்றி கிட்டும். உங்கள் தயாரிப்புகள் பிரபலமடையும். அரசாங்க ஆதரவும், உதவியும் கிட்டும்.
அரசியல்துறையினர்: இப்புத்தாண்டு, உங்களுக்கு லாபகரமான ஆண்டு என்பதை கிரக நிலைகள் தெளிவாகவும், உறுதியாகவும் எடுத்துக்காட்டுகின்றன. கட்சியில் ஆதரவு பெருகும். சிலருக்கு, கட்சி மாற்றம் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளதை கிரகங்கள் எடுத்துக்காட்டுகின்றன. பிரமுகர் ஒருவருடன் தொடர்பு கிட்டும். அது உங்களுக்கு பல வகைகளிலும் உதவும். இதனை அனுபவத்தில் காணலாம்.
மாணவ – மாணவியர்: கல்வித் துறைக்கு அதிகாரம் கொண்டுள்ள அனைத்து கிரகங்களும் சுபத்துவப் பாதையில் சஞ்சரிக்கின்றனர். படிப்பில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும். கடினமான பாடங்களைக்கூட, எளிதில் புரிந்துகொள்ளும் ஆற்றல் மிகும்.
விவசாயத் துறையினர்: விவசாயத் துறையின் ஏற்றத் தாழ்வுகளை எடுத்துக் காட்டும் கிரகம், செவ்வாய். அவர் இம்மாதம் முழுவதும், உங்களுக்குச் சாதகமாக சஞ்சரிப்பதால், வருமானமும் விளைச்சலும், எதிர்பார்ப்பை விட, சற்று அதிகமாகவே இருக்கும். மனத்தை அரித்துவந்த பழைய கடன்களை ஓரளவு அடைத்து, நிம்மதி பெற வழிபிறக்கும். தற்போதைய தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், புதிய விளை நிலம் வாங்கும் யோகமும் அமைந்திருப்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
பெண்மணிகள்: கிரக நிலைகள் உங்களுக்கு அனுகூலமாகவே சஞ்சரிக்கின்றனர், இப்புத்தாண்டில்! உங்கள் எண்ணங்கள், ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். திருமண வயதில் உள்ள பெண்களுக்கு, நல்ல வரன் அமையும். கல்லூரி மாணவிகளுக்கு, வெளிநாடு சென்று, உயர்கல்வி படிப்பதற்கு, உதவி கிடைக்கும். படித்து முடித்துள்ள கன்னியருக்கு, நல்ல வேலை கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டுவந்த மனக் கசப்புகள், கருத்துவேற்றுமைகள் ஆகியவை இப்புத்தாண்டில் நல்லபடியே தீரும்.
அறிவுரை: கன்னி ராசியில் பிறந்துள்ள அனைவருக்கும் இப்புத்தாண்டில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். அத்தகைய வாய்ப்புகளை உடனுக்குடன் கைப்பற்றி, தங்கள் நலனுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விதி வாய்ப்பினைத் தரும். மதி – அவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு பக்க பலமாக இருக்கின்றன – முக்கிய கிரகங்கள்!
பரிகாரம்: இப்புத்தாண்டில், ராகுவிற்கு மட்டும் பரிகாரம் செய்தால் போதும்! மற்ற கிரகங்களுக்குப் பரிகாரம் அவசியமில்லை!! பரிகாரத்திற்கு ராகுவை சனிகிரகமாகக் கருத வேண்டும் என அறிவுறுத்துகின்றன மிகப் பழமையான ஜோதிடக் கிரந்தங்கள். திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, திருப்பாம்புரம், நாகமங்களா (கர்நாடகா) திருத்தல தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும். கோயிலுக்குச் செல்லும்போது தவறாமல் எள் எண்ணெய் தீபம் ஏற்றிவிட்டு வரவும். மறந்துவிடாதீர்கள்! இது ஒரு சக்திவாய்ந்த, சூட்சுமமான பரிகாரமாகும்.
துலாம்
சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை
குடும்பம்: கிரக சஞ்சார நிலைகளின்படி, இந்த ஆண்டு முழுவதும் வரவை விட செலவினங்களே அதிகமாக இருக்கும்! ஆவணி 8-ம் (24-8-2024) தேதியிலிருந்து, கார்த்திகை மாதம் முடியும் வரை, நிதி நெருக்கடியைச் சமாளிக்க வேண்டிவரும். சில தருணங்களில், புதிய கடன்களை வாங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். தவிர்க்க முயற்சியுங்கள். ஏனெனில், கடனைவிட, ஓர் கொடிய விஷம் கிடையாது. குடும்பத்திலும், பல பிரச்னைகள் கவலையை அளிக்கும். ஆரோக்கியத்திலும், சற்று கவனமாக இருத்தல் அவசியமாகும். ராகுவின் நிலையினால், எதிர்பாராத இடங்களிலிருந்து உதவி கிடைக்கும். உடல் பாதிப்பும் அளவோடு நிற்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். ஒருசிலருக்கு, இடமாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. திருமண முயற்சிகளில், சிறிது குழப்பம் ஏற்பட்டு, அதன்பின்பு, வரன் நிச்சயமாகும். சொத்து பாகப்பிரிவினை சம்பந்தமாக நீதிமன்றம் செல்லவேண்டிய அவசியம் ஏற்படும்.
உத்தியோகம்: உங்கள் பணிகளில் மிகவும் கவனமாக செயல்படவேண்டிய ஆண்டு இது! மேலதிகாரிகளின் கண்டிப்பு, கவலையை அளிக்கும். ஆடி மாதம் சிறிய ஆரோக்கியக் குறைவு ஏற்படுவதால், விடுப்பில் செல்ல நேரிடும். ஆயினும், உத்தியோகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்பதை கிரக நிலைகள் உறுதி செய்கின்றன. புதிதாக வேலைக்கு முயற்சிக்கும் இளைஞர்களுக்கு, மனத்திற்குத் திருப்தியளிக்காத, வேலை கிடைக்கும். ஒப்புக்கொள்வது எதிர்காலத்திற்கு, அஸ்திவாரமாக இது அமையும். வெளிநாட்டில் பணியாற்றிவரும் துலாம் ராசி அன்பர்கள், தமது பணிகளிலும், பொறுப்புகளிலும் அதி கவனமாக இருத்தல் அவசியமாகிறது. அவசர முடிவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். கிரக நிலைகளின்படி, தற்போது பார்த்துவரும் உத்தியோகத்தில் விரக்தி ஏற்படக்கூடும். உங்கள் மனமே, உங்களுக்கு எதிரியாகக்கூடும் எனக் கூறுகின்றன, மிகப் பழைமையான ஜோதிடக் கிரந்தங்கள், தற்போதைய கிரக நிலைகளைப் பற்றி!!
தொழில், வியாபாரம்: கண்ணும் கருத்துமாக, இருக்கவேண்டிய புத்தாண்டு இது! லாபத்தைத் தக்கவைத்துக் கொள்ள சற்று பாடுபடவேண்டியிருக்கும். கூடிய வரையில், விஸ்தரிப்புத் திட்டங்களை, புரட்டாசி மாதம் முடியும் வரையில் ஒத்திப்போடுவது விவேகமாகும். பண விஷயங்களில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ஆண்டாகும்.கடனுக்கு சரக்குகள் அனுப்புவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். இது ஏற்றுமதித் துறையினருக்கு முற்றிலும் பொருந்தும்!! வரவேண்டிய பாக்கிகளை எளிதில் வசூல் செய்ய இயலாது. சந்தை நிலவரமும் ஓரளவே உதவிகரமாக இருக்கும். தொழிற்சாலைகளுக்கு, சட்டப்படி அமைக்கப்படவேண்டிய பாதுகாப்பு விதிகளைக் கண்டிப்பாகச் செயல்படுத்தவும். ஏனெனில், கிரக நிலைகளின்படி, விபத்துகள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதைக் கிரகங்கள் குறிப்பிட்டுக்காட்டி எச்சரிக்கை செய்கின்றன.
கலைத்துறையினர்: வருமானம் ஒரே சீராகவும், அளவோடும் இருக்கும், இப்புத்தாண்டு முழுவதும்! பொது மக்களின் ஆதரவு, உற்சாகத்தை அளிக்கும். வீட்டுப் பணியாளர்களினால், பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆடம்பரச் செலவுகளைக் கண்டிப்பாகக் குறைத்துக் கொள்ள வேண்டிய ஆண்டு, இந்தக் குரோதிப் புத்தாண்டு!! திரைப்படத் துறையினர், புதிய முதலீடுகளில் அதி ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலகட்டமிது. நஷ்டம் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் உணர்த்துகின்றன.
அரசியல்துறையினர்: சம்பந்தப்பட்ட கிரகங்கள், அனுகூலமாக சஞ்சரிக்கவில்லை! அடிக்கடி மனதில் குழப்பமும், சஞ்சலமும் மேலிடும். தற்போதுள்ள கட்சியைவிட்டு, வேறு கட்சிக்கு மாறிவிட, ஆர்வம் மேலிடும். தை மாதம் 7-ம் (20-1-2025) தேதியிலிருந்து கிரக நிைலகளின் ஆதிக்கம் அனுகூலமாக மாற ஆரம்பிக்கின்றன. அதுவரை பொறுமையாக இருங்கள்.
மாணவ – மாணவியர்: இப்புத்தாண்டு முழுவதும், கல்விக்கு அதிகாரம் பெற்ற அனைத்து கிரகங்களும் ஓரளவு அனுகூலமாக இருப்பதால், கல்வி முன்னேற்றம் எவ்விதத் தடங்கலுமின்றி நீடிக்கும். ஆடி மாதம் மட்டும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். உயர்கல்விக்கு, பிறர் உதவி கிடைக்கச் செய்வார், உங்களுக்கு அனுகூலமாக நிலைகொண்டுள்ள ராகு! நன்மை செய்வதிலும், ராகுவிற்கு ஈடிைண யாருமில்லை. பலருக்கு, படிப்பு முடிந்தவுடன், வேலை அளித்தருள்வார், ராகு!
விவசாயத் துறையினர்: செவ்வாய் மற்றும் ராகு ஆகிய இருவரும் சுப பலம் பெற்றுத் திகழ்கின்றன, இ்ப்புத்தாண்டில்! தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளுக்கு எவ்விதக் குறைவுமிராது. கால்நடைகள் அபிவிருத்தியடையும். பழைய கடன்கள் அவ்வப்போது தொல்லை தரும்.
பெண்மணிகள்: குரு, சுக்கிரன் ஆகிய இருவருமே உங்களுக்கு அனுகூலமாக இல்லை, இப்புத்தாண்டு முழுவதும்! ஆயினும், ராகு, உங்களுக்கு ஆதரவாக நிலைகொண்டுள்ளார். அடிக்கடி எதிர்பாராத இடங்களிலிருந்து உதவி கிடைக்கும். வேலை பார்க்கும் பெண் மணிகளுக்கு, பணிச் சுமை அதிகரித்தாலும், அதற்கேற்ற ஊதியம் கிடைக்கும். திருமணத்திற்குக் காத்துள்ள கன்னியருக்கு, சிறு தயக்கமும், குழப்பமும் ஏற்பட்டு அதன் பின்பு வரன் அமையும்.
அறிவுரை: உடல் நலனில் கவனமாக இருங்கள். தேவையற்ற அலைச்சல்களையும் உடல் உழைப்பையும் குறைத்துக் கொள்ளுங்கள்.நிரந்தர உடல் உபாதைகளுக்கு, சிகிச்சைப் பெற்று வரும் துலாம் ராசியினர், மருந்துகளைக் குறிப்பிட்ட நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஓய்வு அவசியம்.
பரிகாரம்: வியாழக்கிழமைகள்தோறும், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில், மாலையில் தீபத்தில் சிறிது நெய் சேர்த்து வந்தால் அனைத்து தோஷங்களும் கதிரவனைக் கண்ட பனி போல் மறையும்.
விருச்சிகம்
விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை
குடும்பம்: இந்தத் தமிழ்ப் புத்தாண்டு முழுவதும், சுக்கிரன் உங்களுக்கு அனுகூலமாக சஞ்சரிக்கிறார்! சித்திரை 18-ம் (1-5-2024) தேதியிலிருந்து, குரு பகவானும், உங்களுக்கு ஆதரவாக மாறி, இப்புத்தாண்டு முழுவதும், சுப பலத்துடன் திகழ்கிறார். அர்த்தாஷ்டக ராசியில் சனி – செவ்வாய் தோஷம் ஏற்பட்டுள்ளது. வருமானம் திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் குறையும். உஷ்ண சம்பந்தமான பிணிகள் உடல் உபாதைகளை ஏற்படுத்தும். குறிப்பாக, சருமம் சம்பந்தமான பிரச்னைகள், எளிய மருத்துவ சிகிச்சை மூலம், குணம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சுப நிகழ்ச்சிகளும், சுபச் செலவுகளும் நிகழும். வெளிநாட்டில் பணியாற்றிவரும் நெருங்கிய உறவினர் ஒருவரின் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். திருமண முயற்சிகளுக்கு, ஏற்ற புத்தாண்டு இது! கருவுற்றிருக்கும் பெண்மணிகளுக்கு, சுகப் பிரசவம் ஏற்படும். ஒருசிலருக்கு, வசதியான வீட்டிற்கு மாற்றத்தை ஏற்படுத்துவார், செவ்வாய்.
உத்தியோகம்: அர்த்தாஷ்டகத்தி்ல் சனி சஞ்சரிப்பதாலும், ெசவ்வாய் இணைந்திருப்பதாலும், வேலைச்சுமை, சக்திக்கு மீறியதாக இருக்கும். அலுவலகப் பொறுப்புகள் காரணமாக, அடிக்கடி வெளியூர்களுக்குச் செல்ல நேரிடும். பயணங்களின்போது, விழிப்புடன் இருப்பது அவசியம். மேலதிகாரிகளின் கண்டிப்பு, கவலையை அளிக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகளைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். ஏனெனில் கிரக நிலைகள் ஓரளவே சாதகமாக அமைந்துள்ளன. இடைத் தரகர்களால், ஏமாற்றப்படக்கூடும்.
தொழில், வியாபாரம்: தொழில் மற்றும் வர்த்தகத் துறைக்குப் பொறுப்பேற்றுள்ள கிரகங்கள், ஓரளவு அனுகூலமாக இருப்பதால், நல்ல முன்னேற்றம் ஏற்படும். சந்தையில் உங்கள் சரக்குகளுக்கு, நல்ல வரவேற்பு கிட்டும். அதனால், லாபம் உயரும். நிதி நிறுவனங்கள் தக்க தருணத்தில் உதவும். புதிய விற்பனைக் கிளைகளை ஆரம்பிப்பதற்கு, அனுகூலமான ஆண்டு இது! தொழிற்சாலையை, சிறு முதலீட்டில் அபிவிருத்தி செய்து கொள்ளலாம். ஏற்றுமதித் துறையினருக்கு, வியாபாரம் சம்பந்தமாக வெளிநாடு ஒன்றிற்குச் சென்றுவரும் சாத்தியக்கூறு உள்ளதையும் கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. புதிய துறைகளில் முதலீடு செய்யலாம். இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் பயன்படுத்திக்கொள்ள கிரக நிலைகள் சுப பலம் பெற்றுள்ளன.
கலைத்துறையினர்: சுக்கிரனும், கலைத்துறைக்கு அதிகாரம் படைத்த மற்ற கிரகங்களும், சுபத்துவப் பாதைகளில் வலம் வருகின்றனர்! புதிய வாய்ப்புகள் எவ்வித முயற்சியுமின்றி, உங்களைத் தேடி வரும்.
அரசியல்துறையினர்: சுக்கிரன்தான் அரசியல் துறைக்கு பிரதான கிரகமாவார். செவ்வாய், சனி, ராகு ஆகிய மூவருக்கும் அரசியல் துறையில் அதிகாரம் உண்டு. நான்கு கிரகங்களின் சஞ்சார நிலைகளும், விருச்சிக ராசியினருக்கு இப்புத்தாண்டு ஓரளவு நன்மைகளையும், சில தருணங்களில், சில பிரச்னைகளையும் அளிக்கக்கூடியவை! ேகாள்சார விதிகளின்படி, இப்புத்தாண்டின் ஆரம்பத்திலிருந்து, கார்த்திகை 21-ம் (6-12-2024) தேதி வரை அரசியல் துறை அன்பர்களுக்கு, முன்னேற்றமான காலகட்டமாகும். மேல்மட்டத் தலைவர்களின் ஆதரவு மன நிறைவையளிக்கும். கட்சியில் செல்வாக்கு ஓங்கும். பிற அரசியல் கட்சிகளிலிருந்து அழைப்பு வரும். தங்கள் கட்சியில் சேரும்படி! அதன் காரணமாக, மனதில் சபலங்களும், அதே தருணத்தில் பயமும், தயக்கமும் உண்டாகும். எத்தகைய முடிவானாலும், சிந்தித்துச் செயல்படுங்கள்.
மாணவ – மாணவியர்: ஆவணி 18-ம் தேதி (3-9-2024) வரை வித்யா ஸ்தானமும், வித்யா காரகரும் சுப பலம் பெற்று வலம் வருகின்றனர். இக்காலகட்டத்தில், கல்வியில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும். விளையாட்டுகள், பேச்சுப் போட்டிகள், சங்கீதம் ஆகிய அனைத்திலும் வெற்றிபெற்று பரிசு வாங்கும் யோகம் அமைந்துள்ளது. பாடங்களில் உற்சாகத்துடன் மனம் ஈடுபடும். ஆவணி 19-ம் (4-9-2024) தேதியிலிருந்து, படிப்பில் சிறிது பின்னடைவு ஏற்படும். உடலில் அசதியும், மனதில் சோர்வும், ஏற்பட வாய்ப்புள்ளது.
விவசாயத் துறையினர்: விருச்சிக ராசி அன்பர்களுக்கு, ராசி நாதன் செவ்வாய்! அவரே பூமிகாரகராகியபடியாலும், கோள்சார விதிகளின்படி, உங்களுக்கு பல வகைகளிலும் ஆதரவாகவே சஞ்சரிக்கிறார், இப்புத்தாண்டில்!! ஜனன கால கிரக நிலைகளுக்கேற்ப, பலருக்கு சொந்த வீடு அமையும் யோகம் உள்ளது, இப்புத்தாண்டில்! சிலருக்கு, வசதியான வீட்டிற்கு மாற்றம் ஏற்படும். ஆடு, மாடுகள் சிறந்த அபிவிருத்தியை அடையும். அரசாங்கச் சலுகைகள் தேடி வரும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெறலாம், இந்தக் குரோதி தமிழ்ப் புத்தாண்டில்!!
பெண்மணிகள்: குரு, சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களின் பரிபூரணமான ஆசி இப்புத்தாண்டு முழுவதும் உங்களுக்குக் கிடைப்பது, உங்கள் அதிர்ஷ்டமே! மன நிறைவான குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சியளிக்கும் உத்தியோகம். அன்பும், பாசமும் அள்ளித்தரும் குழந்தைகள், அந்நியோன்யம் நிறைந்த கணவர் என குறையில்லாத புத்தாண்டு இந்தக் குரோதி தமிழ்ப் புத்தாண்டு! கிரக நிலைகளின்படி இந்த ஆண்டு உங்களுக்கு ஓர் அரிய வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும்!
அறிவுரை: வருவதை வாரியிறைத்து விடாமல், எதிர்காலத்திற்கென்று இப்போதே சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்!
பரிகாரம்: அர்த்தாஷ்டக நிலையில் சஞ்சரிக்கும் சனி பகவானுக்கு, பரிகாரம் செய்வது நன்மை செய்யும். சனிக்கிழமைகளில் பகல் உணவு ஒரு பொழுது மட்டும் அருந்தி, இரவில் உபவாசம் இருத்தல் மிகச் சிறந்த பரிகாரமாகும். இரவில் பால் – பழம் மட்டும் சாப்பிடலாம். கைமேல் பலன் கிடைக்கும்.
தனுசு
மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை
குடும்பம்: சுக்கிரன், சனி, செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களினாலும் இப்புத்தாண்டில் பல நன்மைகள் உங்களுக்கு ஏற்படவுள்ளன. தேவையான அளவிற்கு வருமானம் தந்தருள்வார், சுக்கிரன்! அவருக்கு ஆதரவாக ஜீவன காரகரான சனி பகவானும் வலம் வருவதால், பணப் பிரச்னை இப்புத்தாண்டில் இருப்பதற்கு வாய்ப்பில்லை!! குரு பகவான், ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திற்கு மாறுவதால், தேவையற்ற, அநாவசிய செலவுகளில் பணம் விரயமாகும். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருடன் வாக்குவாதம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அர்த்தாஷ்டக ராசியில் ராகு நிலைகொண்டிருப்பதால், உடல் நலனில் பாதுகாப்பாக இருப்பது அவசியம். தேவையில்லாமல், ெவளியில் செல்வது, தரக்குறைவான உணவகங்களில் உணவருந்துவது, பிறருடன் வாக்குவாதம் செய்தல் ஆகியவற்றைத் தவிர்ப்பது மிகவும் அவசியம்.
உத்தியோகம்: உத்தியோகத் துறைக்கு அதிபதியான சனி பகவான், அவரது ஆட்சிப் பீடமான கும்ப ராசியில் அமர்ந்திருப்பது, சிறந்த முன்னேற்றத்தைத் தரவல்ல கிரக நிலையாகும்! பலருக்கு, நிறுவன மாற்றமும் அதனால் பதவியுயர்வும் கிட்டும். மேலதிகாரிகள் மற்றும் நிறுவனத்தினர் ஆகியோரின் ஆதரவு மகிழ்ச்சியையும் மன-நிறைவையும் அளிக்கும். பலருக்கு, இடமாற்றம் ஏற்படுவதற்கும் அதன் காரணமாக, கூடுதல் சலுகைகளும் கிடைக்குமென கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. புதிதாக வேலைக்கு முயற்சி செய்யும் தனுர் ராசியினருக்கு, மன-நிறைவையளிக்கும் நிறுவனத்தில், நல்ல ஊதியத்தில், வேலை கிடைக்கும். வெளிநாடு சென்று வேலை பார்க்கும் ஆர்வமிருப்பின், இப்புத்தாண்டில் அது நிறைவேறும்! முயற்சிக்கவும்!!
தொழில், வியாபாரம்: வர்த்தகத் துறையும், சனி பகவானின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது! அவர் இந்த ஆண்டு முழுவதும் தனுர் ராசியினருக்கு, பல நன்மைகளை அளிக்கும்படி நிலைகொண்டுள்ளார். வியாபாரத்தை விருத்தி செய்வதற்கு ஏற்ற மாதமிது! புதிய கிளைகள் திறக்கலாம். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வங்கி போன்ற நிதிநிறுவனங்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் பொருளாதார நிலையைச் சீர்செய்துகொள்ள உதவிகரமாக அமைந்துள்ளன, கிரக நிலைகள் இத்தமிழ்ப் புத்தாண்டில்!!
கலைத்துறையினர்: வருமானம் உயரும்! புதிய வாய்ப்புகள் எளிதில் கிட்டும். சங்கீத வித்வான்கள், உபன்யாசகர்கள், நாதசுவர வித்வான்கள், வீணை வித்வான்கள், பரதநாட்டியக் கலைஞர்கள் ஆகியோருக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். சமூகத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும் உயர்வது மகிழ்ச்சியை அளிக்கும். பொலிவிழந்து, நிற்கும் நாடகத் துறைக்குப் புத்துயுர் ஊட்டும் ஆண்டு இந்தத் தமிழ்ப் புத்தாண்டு. சென்ற காலத்தில், சங்கீதமும், நாடகமும், நடிப்பும் ஒன்றிணைந்து, ஒரே கலையாகப் பிரகாசித்து வந்தது! திரைப்படம் வந்ததும், நாடகத் துறை ஒளியிழந்து மங்கியது. இருப்பினும், அதன் பெருமை மறையவில்லை!! கிரக நிலைகளின்படி, இப்புத்தாண்டில் நாடகக் கலை புத்துயுர் பெற்று விளங்கும் – சுக்கிரனின் தெய்வீக பலத்தினால்!
அரசியல்துறையினர்: கலைத் துறைக்கு அதிபதியான சுக்கிரன்தான், அரசியல் துறைக்கும் அதிகாரியாவார்! அவர் இப்புத்தாண்டில் நல்ல சுப பலம் பெற்று வலம் வருவதால், தனுர் ராசி அரசியல் துறையினருக்கு சிறந்த முன்னேற்றம் காத்துள்ளது, இப்போது! கட்சியில் செல்வாக்கு உயரும். சிலருக்கு, இந்தப் புத்தாண்டில் முக்கிய பதவியொன்றை ஏற்பதற்கும் யோக பலன்கள் உள்ளன.
மாணவ – மாணவியர்: வித்யா காரகரான புதன், உதவிகரமாக சஞ்சரிக்கிறார். ஆவணி, புரட்டாசி ஆகிய இரு மாதங்களைத் தவிர, மற்ற மாதங்கள் அனைத்திலும் சுபபலம் பெற்று விளங்குவதால், படிப்பில், எவ்விதத் தடங்கலுமின்றி நல்ல முன்னேற்றம் காத்துள்ளது. உயர் கல்விக்கு உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) பெற்றுத் தருவார் புதன்! ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ் போன்ற உயர் கல்விகளில் பங்கேற்றால் வெற்றிக் கனியைப் பெற்றுத் தந்திடுவார்கள், சம்பந்தப்பட்ட கிரகங்கள். அந்த அளவிற்கு யோக பலன்கள் கிடைக்கவுள்ளன உங்களுக்கு, இத் தமிழ்ப் புத்தாண்டில்!!
விவசாயத் துறையினர்: உங்களுக்கு மட்டும் குறையா வைக்கப்போகிறார், செவ்வாய்? விவசாயத் துறைக்கு சம்பந்தப்பட்ட மற்ற கிரகங்களும், யோக பலன்கள் அளிக்கக்கூடிய பாதைகளில் சஞ்சரிப்பதால், விவசாயத்தில் நல்ல பலன்களை அனுபவிக்கவிருக்கின்றீர்கள், குரோதி தமிழ்ப் புத்தாண்டில்! விளைச்சல் எதிர்பார்க்கும் அளவிற்கு கிடைப்பது, மகிழ்ச்சியை அளிக்கும். சந்தையில் உங்கள் விளை பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்கும். ஏற்றுமதித் துறையில் உள்ள விவசாயத் துறையினருக்கு, புதிய ஆர்டர்கள் கிடைப்பது, மகிழ்ச்சியை அளிக்கும். பழைய கடன்களை அடைத்து, உங்கள் பொருளாதாரத்தை சீர்ெசய்துகொள்ள ஏற்ற புத்தாண்டாகும்,இந்தத் தமிழ் குரோதி புத்தாண்டு.
பெண்மணிகள்: குரு பகவான் இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு அனுகூலமாக இல்லை! இந்தக் குறையை சுக்கிரன் தீர்த்து வைக்கிறார்!! குடும்பச் செலவிற்குத் தேவையான வருமானத்தைத் தந்தருள்கிறார், சுக்கிரன். சிறு சிறு வாக்குவாதங்களைத் தவிர, மற்றபடி, குடும்பச் சூழ்நிலை அமைதியாகவே இருக்கும். ஆவணி மாதத்தில் எதிர்பாராத பெரிய செலவொன்று ஏற்படும். அப்போது, சனியும் சுக்கிரனும் உதவிக்கரம் நீட்டி, சமய சஞ்சீவிகளாக உதவுகின்றனர்.
அறிவுரை: சிக்கனமாக செலவு செய்யுங்கள். ஏனெனில், கிரகக் கூட்டணிகள் ஏற்படும்போதெல்லாம் எதிர்பாராத செலவுகளைச் சமாளிக்க வேண்டிவரும். காற்றுள்ளபோதே தூற்றிக்ெகாள் என்பது ஆன்றோர் வாக்காகும், மறந்துவிடாதீர்கள்!!
பரிகாரம்: குருவுக்கு மட்டும், பரிகாரம் செய்வது நல்ல பலனையளிக்கும். வியாழக்கிழமைகளில் பசுக்களுக்கோ அல்லது ஏழைகளுக்கோ உணவளிப்பது, குரு பகவானின் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும் மிகச் சிறந்த பரிகாரமாகும். ஏழைகள் உடுப்பதற்கு வஸ்திரம் கொடுப்பதும், தன்னிகரற்ற பரிகார பலனை அளிக்கவல்லது.இத்தகைய பரிகாரங்களைச் செய்வதற்கு எளியதாகத் தோன்றினாலும், அவற்றின் பலனோ அளவற்றது என்பதைப் “பூர்வ ஜென்ம நிர்ணய ஸாரம்”,மற்றும் “கருட புராணம்” ஆகியவற்றில் விவரிக்கப்பட்டுள்ளது. இவை உடனுக்குடன் பலனளிப்பவையாகும்.
மகரம்
உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் வரை
குடும்பம்: மகரம், சனி பகவானின் ஆட்சி வீடாகும். ஏழரைச் சனியின் ஐந்து வருட தோஷத்தைத் தாங்கிய மகர ராசி அன்பர்கள், தற்போது சனி பகவானின் கடைசி இரண்டரை வருட காலகட்டத்தை, இப்போது இந்த தமிழ்ப் புத்தாண்டில் கடந்துகொண்டிருக்கின்றனர். ஏழரைச் சனியின் ஐந்து வருடக் கால தோஷத்திற்குப் பரிகாரமாக, கடைசி இரண்டரை வருடக் காலத்தில் நன்மை செய்வதாக சத்தியப்ரமாணம் செய்து கொடுத்திருக்கிறார், சனி பகவான், துவாரகையில் கிருஷ்ண பகவானுக்கு! ஜோதிடக் கலையும் இதனை உறுதி செய்துள்ளது. ஆதலால், சனி பகவானின் கும்ப ராசி சஞ்சாரக் காலம், மகர ராசி அன்பர்களுக்கு அளவற்ற நன்மைகளைச் செய்யவுள்ளார். இதில், வியப்படையச் செய்யும் உண்மை என்னவெனில், மகரம், கும்பம் ஆகிய இரண்டு கிரகங்களுமே சனி பகவானின் ஆட்சிவீடுகளேயாகும்! குடும்பச் சூழ்நிலையில் மிக நல்ல மாறுதல்களை இனி காண முடியும். உறவினர்களிடம் ஏற்பட்டுவந்த பிணக்கம், கருத்துவேற்றுமை, பகையுணர்வு ஆகியவை நீங்கி ஒற்றுமை ஏற்படும். மன நிம்மதியைப் பாதித்து வந்த பல பிரச்னைகள் படிப்படியாக நீங்குவதை அனுபவத்தில் காணலாம், தொடர்ந்து, பலமாதங்களாக ஏற்பட்டுவந்த பண நெருக்கடி, படிப்படியாக தளரும். தடைப்பட்டு வந்த பிள்ளையின் உத்தியோக முயற்சியில்,இனி வெற்றி கிட்டும். திருமண முயற்சிகளில் நல்ல வரன் அமையும். உடல் ஆரோக்கியத்திலும், மிக நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிரந்தர உபாதைகளுக்காக, தொடர் சிகிச்சைப் பெற்று வரும் வயோதிகர்களுக்குக்கூட, சிரமங்கள் குறைந்து, நல்ல முன்னேற்றம் ஏற்படும். கொடுப்பதிலும், கெடுப்பதிலும் ராகுவிற்கு அடுத்த நிலையில் சனி பகவானை வைத்துள்ளது, ஜோதிடக் கலை!!
உத்தியோகம்: வேலை பார்க்கும் இடத்தில், தொடர்ந்து உங்களுக்கு ஏற்பட்டு வந்த பல பிரச்னைகள், நல்லபடி விலகும். உங்களைக் கண்டாலே பிடிக்காத மேலதிகாரி ஒருவர் இடமாற்றம் செய்யப்படுவதால், இனி நீங்கள் உங்கள் ெபாறுப்புகளில் கவனத்தைச் செலுத்த முடியும். ஒரு சிலருக்கு, சிறு பதவியுயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்க இருப்பதை ஜீவன காரகரான சனி பகவானின் சஞ்சார நிலை எடுத்துக்காட்டுகிறது. தற்காலிகப் பணியாளர்கள், பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் – சனி பகவானின் சஞ்சார நிலை ஆதரவாக மாறியுள்ளதால்!! வேலையில்லாமல் தவித்து வந்த பல இளைஞர்களுக்கு, வாழ்வாதாரமான நல்ல வேலையைத் தந்தருள்வார் இத் தமிழ்ப்புத்தாண்டில் சனி பகவான்! ஒரு சிலருக்கு, இடமாற்றமும், அதே தருணத்தில் பதவியுயர்வையும் பெற்றுத் தருவார். வெளிநாடு சென்று, பணியாற்றும் ஆர்வம் உள்ள மகர ராசியினர், இப்புத்தாண்டில் வெற்றி பெறுவது உறுதி!
தொழில், வியாபாரம்: சனி பகவான்தான், தொழில் மற்றும் வர்த்தகத் துறையினருக்கு, அதிபதியாவார். சுக்கிரன், ராகு, செவ்வாய் ஆகிய மூவருக்கும் கூட இத்துறையில் ஆதிக்கம் உள்ளது. இந்த நான்கு கிரகங்களுமே அனுகூல நிலைகளில் சஞ்சரிப்பதால், தொழிலில் வியக்கத்தக்க முன்னேற்றமும், லாபமும், அபிவிருத்தியும் ஏற்படும். தொழிற் சாலையை விரிவுபடுத்துவதற்கு அவசியமான நிதி வசதியை வங்கிகள் மூலம் பெற்றுத் தந்து, உதவுவார் ஜீவன காரகரான சனி பகவான். நவீன இயந்திரங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு அவசியமான அனுமதியை அரசாங்கத்திடமிருந்து கிடைக்கச் செய்வார், சுக்கிரன். சந்தை நிலவரம் அனுகூலமாகவே நீடிக்கிறது. உங்கள் பொருளாதார நிலையையும் சரிசெய்து கொள்ள ஏற்ற காலகட்டமிது. தொழில் மற்றும் வர்த்தகத் துறையினருக்கு, இப்புத்தாண்டு ஓர் அரிய வாய்ப்பாகும். நழுவ விட்டுவிடாதீர்கள். ஏற்றுமதித் துறையினருக்கும், வெளிநாட்டுச் சந்தைகளில் புதிய வர்த்தக நிறுவனங்களுடன் தொடர்புகள் கையெழுத்தாகும்.
கலைத்துறையினர்: அடியோடு நின்றுபோயிருந்த நிலை மாறி, புதிய வாய்ப்புகள் தேடி வரும். இப்புத்தாண்டின் மீண்டும் திரைப்படத்துறை தலையெடுத்துவிடும் என உறுதியளிக்கின்றன, கிரக நிலைகள். நிதி நிறுவனங்கள் ஒன்றோடோன்று போட்டி, போட்டுக்கொண்டு, உதவ முன்வரும்.
அரசியல்துறையினர்: அரசியல் துறையைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள, அனைத்து கிரகங்களும் சுபத்துவப் பாதையில் சஞ்சரிக்கின்றன. மக்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும்.
மாணவ – மாணவியர்: இப்புத்தாண்டு முழுவதும், புதன் உங்களுக்கு அனுகூலமாகவே வலம் வந்துகொண்டிருப்பதால், கல்வி முன்னேற்றத்தில் எவ்விதத் தடங்கலும் ஏற்பட வாய்ப்பில்லை. ஒருசிலருக்கு, வெளிநாடு சென்று உயர் கல்வி பெறுவதற்கும் உதவித் தொகை கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
விவசாயத் துறையினர்: இப்புத்தாண்டு முழுவதும், செவ்வாய் உள்ளிட்ட அனைத்து கிரகங்களும் அனுகூல நிலைகளில் வலம் வருகின்றனர். அரசாங்க உதவியும்சலுகைகளும் கிடைக்கும் அடிப்படை வசதிகளான, தண்ணீர், உரம், விதைகள், ஆகியவற்றிற்கு எவ்விதத் தட்டுப்பாடும் இராது.
பெண்மணிகள்: உங்கள் நன்மைகளுக்கும், மகிழ்ச்சிக்கும் பாதுகாப்பு அளிக்கும் குரு, சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களும் சுப பலம் பெற்று இவ்வாண்டு முழுவதும் சஞ்சரிப்பதால், மனநிறைவை குறைவில்லாது உங்களுக்கு அளிக்கக்கூடிய தமிழ்ப்புத்தாண்டு இது. பல பெண்மணிகளுக்கு, புத்திர பாக்கியம் கிட்டும். வேலை கிடைக்காது மனம் வருந்தும் கன்னியருக்கு, மனத்திற்கு திருப்தியளிக்கும் நல்ல வேலை கிடைக்கும்.
அறிவுரை: வாக்கு ஸ்தானத்தில் சனி பகவான் அதிக பலத்துடன் சஞ்சரிப்பதால், உங்கள் சக்திக்கு மீறிய வாக்குறுதிகளை நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ கொடுத்துவிட்டு, பின்பு கஷ்டப்பட நேரிடும். பேச்சில் நிதானமாக இருங்கள். உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்கவும்.
பரிகாரம்: திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, திருப்பாம்புரம், ஆகிய திருத்தலங்களில் ஒன்றையாவது தரிசித்துவிட்டு வந்தால் போதும். வேறு பரிகாரங்களுக்கு அவசியமில்ைல. அவரவர்கள் வீட்டிற்கு அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் பிரதோஷகாலம் எனப்படும் மாலை வேளையில் எள் எண்ணெய் மண் அகலில் தீபம் ஏற்றி வந்தால் போதும். கற்பனைகள் அனைத்தையும் மீறிய நற்பலன்கள் கிடைக்கும்.
கும்பம்
அவிட்டம் 3ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3ம் பாதம் வரை
குடும்பம்: கோள் சாரத்தில், ஜென்மச் சனியின் ஆதிக்கத்தில் நீங்கள் இருந்தாலும், கும்ப ராசி அவரது ஆட்சி வீடாக இருப்பதால், சிரமங்கள் குறைந்தே இருக்கும். மேலும், சிறு விஷயங்களுக்குக்கூட, அதிக அலைச்சலும், முயற்சியும் மேலிடும். வருமானம் இப்புத்தாண்டு முழுவதும் போதிய அளவிற்கு இருக்கும். எந்த மாதத்திலும் பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை! ஆடி 1-ம் (17-7-2024) தேதி முதல், ஆடி 19-ம் (4-8-2024) தேதிக்குள், எதிர்பாராத பெரிய செலவு ஒன்று ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதை, கிரக நிலைகள் உணர்த்துகின்றன. அதே காலகட்டத்தில், வீட்டிலுள்ள உயர்ந்த பொருள் ஒன்று காணாமற் போவதற்கும் வாய்ப்புள்ளது. எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நாம் எப்பொழுதெல்லாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதை மிகச் சரியாகவும், தக்க தருணத்திலும் எடுத்துரைத்து வழிகாட்டுவதில் ஜோதிடக் கலைக்கு ஈடிணை ஏதுமில்லை!! விவாகம் சம்பந்தமான முயற்சிகளில் சிறு குழப்பம் ஒன்று ஏற்பட்டு, வரன் நிச்சயமாகும். கருவுற்றிருக்கும் பெண்மணிகளுக்கு, சுகப் பிரசவம் ஆகும். காரணம், குருவும், சுக்கிரனும், ரிஷப ராசியில் இணைந்திருப்பதேயாகும்.
உத்தியோகம்: வேலைச் சுமையும்பொறுப்புகளும் அதிகரிக்கும். அலுவலகப் பொறுப்புகள் சம்பந்தமாக, அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்று வரும் அவசியம் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகம் காரணமாக, பலர் குடும்பத்தை விட்டுப் தற்காலிகமாகப் பிரிந்திருக்க நேரிடும். குழந்தைகளின் கல்வி சம்பந்தமாக பிரச்னைகளைச் சமாளிக்கவேண்டி வரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருத்தல் நல்லது. குறிப்பாக, இரவு நேரங்களில், கண் விழித்து, கழிப்பறைக்குச் செல்லும்போது, நிதானம் அவசியம். ஏனெனில், கிரக நிலைகளின்படி, கீழே விழுந்து அடிபடும் தோஷம் உள்ளதை, ஜென்மச் சனி மற்றும் ராகுவின் சஞ்சார நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
தொழில், வியாபாரம்: மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய புத்தாண்டு இது! குறிப்பாக, தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களில் சிலருக்கு விபத்துகள் ஏற்பட சாத்தியக்கூறு உள்ளதை கிரக சஞ்சார நிலைகள் குறிப்பிடுகின்றன. வரும் ஒரு வருடக் காலத்திற்கு, தொழில் விஸ்தரிப்பிற்காக, அதிகளவில், முதலீடு செய்ய வேண்டாம். பல தருணங்களில், வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்களினால், பிரச்னைகள் ஏற்படும். வட மாநிலத் தொழிலாளர்களால், எதிர்பாராத சோதனைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளதை சனி மற்றும் ராகுவின் நிலைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன.
கலைத்துறையினர்: இத்தமிழ்ப் புத்தாண்டில், அளவோடு நன்மைகளைப் பெறுவீர்கள்! வருமானம் போதிய அளவிற்கு இருக்கும் என்பதை குரு மற்றும் சுக்கிரனின் நிலைகள் குறிப்பிடுகின்றன. ஆதலால், பணத் தட்டுப்பாடு இருப்பதற்கு சாத்்தியக்கூறில்லை!! புதிய வாய்ப்புகள், மகிழ்ச்சியை அளிக்கும். மக்களிடையே பிரபலமாவீர்கள்! நடிகர் – நடிகைகளுக்கு, புதிய வாய்ப்புகள் தேடிவரும்.
அரசியல்துறையினர்: ஜென்மச் சனியினால், அதிக அலைச்சலும், உழைப்பும் அசதியை ஏற்படுத்தும். கட்சியில், தேவையற்ற பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். கட்சியின் மீது உங்களுக்குள்ள விஸ்வாசத்தை மேலிடம் சந்தேகிப்பார்கள். மேலும், கட்சியில் நிகழ்ந்துவரும் உட் பூசல்களினால், உங்களுக்கு எதிராக ஓர் அணி உருவாகியுள்ளதை கிரக நிலைகள் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.
மாணவ – மாணவியர்: உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் அவசியம். குறிப்பாக, புத்தாண்டில் முதல் மூன்று மாதங்கள் வெளிேய செல்லும்போதும், பிற மாணவர்களுடன் தர்க்கம் செய்யும்போதும், எச்சரிக்கையாக இருங்கள். வாக்கு ஸ்தானத்தில், ராகு இருப்பதால், உணர்ச்சிவசப்பட்டு, தவறான சொற்களால் பிறர் மனத்தில் ஆத்திரத்தையும், முன்கோபத்தையும் உருவாக்கிவிட சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் சந்தேகத்திற்கிடமின்றி உணர்த்துகின்றன. தவிர்ப்பது உங்கள் எதிர்காலத்திற்கு நல்லது.
விவசாயத் துறையினர்: வயல் பணிகளில், உழைப்பு கடினமாக இருப்பினும், அதற்கேற்ற விளைச்சலைத் தந்தருள்வார்கள், சனி பகவானும், செவ்வாயும்! ஏற்கெனவேயே கூறியுள்ளபடி, இந்தத் தமிழ்ப் புத்தாண்டின் மேகாதிபதியாக சனி பகவான் திகழ்கிறார். கொடுப்பதில், தன்னிகரற்றவர் சனி பகவான்! ஆதலால் இந்த ஆண்டு, தண்ணீர்ப் பற்றாக்குறை சிறிதளவும் இராது. அதற்கு மாறாக, தேவைக்குச் சற்று அதிகமாகவே மழை பொழிவதால், விளைச்சலில் ஓர் சிறு பங்கு பாதிக்கப்படக்கூடும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலனளிக்கும்.
பெண்மணிகள்: அதிக உடல் உைழப்பையும், கற்பனையான கவலைகளையும், இரவு நேரங்களில் கண்விழிப்பதையும் குறைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை, சனி பகவானின் ஜென்ம ராசி சஞ்சார நிலை எடுத்துக்காட்டுகிறது. உடல் உபாதைகளுக்காக, மருத்துவச் சிகிச்சை பெற்றுவரும் பெண்மணிகள், மருத்துவர்கள் ெசால்படி, அந்தந்த நேரத்தில் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அறிவுரை: உணர்ச்சிவசப்படுவது, எதிர்காலத்தைப் பற்றிய கற்பனையான கவலைகள், பயங்கள் ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும் (ஆதாரம்: “ஸிம்ஹவலோகனம்” எனும் மருத்துவ ஜோதிட நூல். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதென்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மனத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பை இந்நூல் விவரித்துள்ளது. எந்த அளவிற்கு, மனதை கற்பனையான கவலைகள் இல்லாமல் பாதுகாத்துக் கொள்கிறோமோ, அந்த அளவிற்கு உடல் ஆரோக்கியமும் நன்கு நீடிக்கும்)
பரிகாரம்: அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிலோ அல்லது உங்கள் வீட்டுப் பூஜையறையிலோ வியாழன்தோறும், மாலை – பிரதோஷ நேரத்தில் மூன்று அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி வந்தால் போதும்.
மீனம்
பூரட்டாதி 4ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி வரை
குடும்பம்: ஏழரைச் சனியின் ஆரம்ப கட்டத்தில் உள்ள மீன ராசி அன்பர்களுக்கு, ராசி நாதனாகிய குரு பகவான், சித்திரை 17-ம் (30-4-2024) தேதி வரை உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கிறார். சித்திரை 18-ம் (1-5-2024) அன்று அனுகூலமற்ற நிலைக்கு மாறிவிடுகிறார். ஜென்ம ராசியில் வலம் வந்து கொண்டிருக்கும் ராகுவினால், நன்மை ஏதும் ஏற்படாது. வீண் அலைச்சல், குடும்பப் பிரச்னைகளினால் கவலை, அலுவலகப் பொறுப்புகள் சம்பந்தமாக, மன நிம்மதி இழத்தல் ஆகியவை தவிர்க்க இயலாதவை! வீண் செலவுகளிலும், மருத்துவ செலவுகளிலும் பணம் விரயமாகும். சித்திரை 18-ம் (1-5-2024) தேதியிலிருந்து கேதுவிற்கு, குரு பகவானின் சுபப் பார்வை கிடைப்பதால், மனைவியின் ஆரோக்கியத்தில் மிகச் சிறந்த முன்னேற்றம் ஏற்படும். கவலை நீங்கும். வெளிநாட்டில் பணியாற்றி வரும் நெருங்கிய உறவினர் ஒருவரின் வருகை மனத்திற்கு மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அளிக்கும். வீண் செலவுகளைத் தவிர்க்க இயலாது. ஜென்ம ராசியில் ராகு நீடிப்பதாலும், ஏழரைச் சனி ஆரம்பமாகியிருப்பதாலும், இரவு நேரங்களில் வெளிச் செல்வதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. சிறு, சிறு உடல் உபாதைகள், சருமம் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட்டு, எளிய சிகிச்சையினால், குணமும் ஏற்படும்.
உத்தியோகம்: ஜீவன காரகரான சனி பகவான், ராசிக்கு விரய ஸ்தானத்தில் நிலைகொண்டிருந்தாலும்,தன பாக்கியாதிபதியான செவ்வாயுடன் இணைந்திருப்பதால், சனியினால் ஏற்படும் தோஷம், பெருமளவில் குறைகிறது. இதற்குக் காரணம், சனி பகவானுக்கு செவ்வாய் பகைக் கிரகமாகும்! சனி பகவானுக்கு இணையான பலம் கொண்டவர், அக்னீ ஸ்வரூபியானசெவ்வாய்! திருமண முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படும். சிலருக்கு இடமாற்றம் அல்லது இலாகா மாற்றம் ஏற்படக்கூடும். நிர்வாகத்தினருடன் கொண்டுள்ள நல்லுறவு, சிறிய தவறினால், பாதிக்கப்படக்கூடும். பேச்சிலும், செயலிலும் சற்று நிதானமாக இருப்பது மிகவும் அவசியமாகும். சக-ஊழியர்களுடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்தல் அவசியம். உங்கள் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் சூட்சுமமாக எடுத்துக்காட்டுகின்றன.
தொழில், வியாபாரம்: மிகக் கடுமையான போட்டிகளை, இப்புத்தாண்டில் நீங்கள் சமாளிக்க வேண்டிவரும். வியாபாரம் சம்பந்தமாக வெளியூர்ப் பயணங்கள் அதிகமாக இருக்கும். அடிக்கடி அதிக அலைச்சலினால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். வர்த்தகத் துறையினர், கடனுக்கு சப்ளை செய்வதைத் தவிர்ப்பது அவசியம் என்பதை கிரக நிலைகள் எடுத்துக் கூறுகின்றன. சிலரால், ஏமாற்றப்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளது. புதிய முயற்சிகளை ஆனி மாதம் முடியும் வரை ஒத்திப்போடுவது விவேகமாகும். பிறரை நம்பி கடன் கொடுத்தால், அது திரும்பி வராது. இத்தகைய தருணங்களில்தான் நாம் எத்தகைய விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை, இருட்டில் வழிகாட்டும் கை விளக்காக ஜோதிடம் எனும் அற்புதக் கலை திகழ்கிறது.
கலைத்துறையினர்: இப்புத்தாண்டில் அதிக நன்மைகளை நீங்கள் எதிர்பார்ப்பதில் பயனில்லை. குரு, அனுகூலமாக இல்லா நிலையில், சுக்கிரன் ஒருவரே உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கிறார். ராகுவினாலும், எவ்வித நன்மையும் உங்களுக்குக் கிடைக்காது. ஆதலால் கையில் இருப்பதைக் கொண்டு சமாளித்துக் கொள்ளவேண்டும், இப்புத்தாண்டில் என்பதை கிரக நிலைகள் தெளிவாகக் காட்டுகின்றன. குறிப்பாக, நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஆகியோருக்கும் சற்று சிரமமான ஆண்டாகும். வீட்டு வேலைக்காரர்கள், வாகனம் ஓட்டுநர்கள் ஆகியோரால் பிரச்னைகள் ஏற்படும்.
அரசியல்துறையினர்: சுக்கிரன் ஒருவரைத்தவிர மற்ற கிரகங்கள் அைனத்தும் அனுகூலமற்ற நிலைகளினால், சஞ்சரிக்கின்றனர். மேலும், இவ்வாண்டு முழுவதும், ஏழரைச் சனிக் காலம் நீடிக்கிறது. கும்பம், சனி பகவானின் ஆட்சி வீடாகத் திகழ்வதால், சனி பகவானால் ஏற்படும் பிரச்னைகள் கடுமையாக இராது. மேல்மட்டத் தலைவர்களுடன் கருத்துவேற்றுமை ஏற்படக்கூடும். ஏழரைச் சனியின் விளைவினால், கட்சிமீது நீங்கள் கொண்டுள்ள, விசுவாசத்தை மேல்மட்டத் தலைவர்களைச் சந்தேகிப்பார்கள். இதற்குக் காரணம். உங்களைப் பற்றி தவறான செய்திகளை கட்சியிலுள்ளவர்களே. தலைவர்களிடம் புகார் செய்துள்ளனர். அவர்கள் விதைத்த சந்தேகம் எனும் விஷ விருட்சம் தலைவர்கள் மனதில் வேரூன்றி வளர்ந்துவிட்டது, சந்தேகம் என்பது, எவராலும் அடக்க முடியாத பேயாகும். தற்போதுள்ள அரசியல் நிலையில் எவர் எதைச் சொன்னாலும், அதுவே உண்மையாகிவிடுகிறது! எவர் நண்பர், எவர்எதிரிஎன்பதைச் சரியாக எவராலும்கண்டுபிடிக்க இயலவில்லை!ஆதலால் எச்சரிக்கையுடன் இருங்கள். வரவிருக்கும் தேர்தலில் நின்றால், வெற்றிக்காகக் கடுமையாக பாடுபட வேண்டியிருக்கும்.
மாணவ – மாணவியர்: கல்விக்கு அதிபதிகளான, புதன் உள்ளிட்ட அனைத்து கிரகங்களும், ஓரளவு உங்களுக்கு ஆதரவாகவே சஞ்சரிப்பதால், படிப்பில் முன்னேற எவ்வித பாதிப்புமின்றி, நீடிக்கிறது, நேர்முகத் தேர்வுகளில் வெற்றி ஏற்படுவது நிச்சயம்! அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று உயர் கல்வி பெற ஆரோக்கியம் இருப்பின் அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளில் இறங்கலாம். கிரக நிலைகளின்படி விசா, எளிதில் கிடைக்கும்.
விவசாயத் துறையினர்: செவ்வாய் ஒரே சீராக சஞ்சரிக்கின்றார், இப்புத்தாண்டு முழுவதும். விவசாயத்திற்கு, தொடர்புள்ள மற்ற கிரகங்களும், ஆதரவாக இருப்பதால், விளைச்சலும் வருமானமும் திருப்திகரமாக இருக்கும். ஆடு – மாடுகள் நல்ல அபிவிருத்தியை அடையும். காலத்தில் மழை பெய்யும். உங்கள் விளைச்சல்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும். பழைய கடன்களைத் தீர்த்து நிம்மதி பெறுவதற்கு, கிரக நிலைகள் உதவிகரமாக அமைந்துள்ளன, இந்தப் புத்தாண்டு முழுவதும். ஏழரைச் சனியின் பாதிப்பினால், வயல்களில் கடுமையாக உழைக்கவேண்டி வரும். இரவு நேரங்களில், துணையில்லாமல் தனியே செல்ல வேண்டாம்.
பெண்மணிகள்: ஏழரைச் சனியின் ஆரம்பப் பிடியில் இருப்பதால், தேவையற்ற அலைச்சலும், தலைவலி, மூட்டுவலி, இடுப்பு வலி, மாதவிடாய் சம்பந்தமான கோளாறுகள் ஆகியவற்றினால், சிரமப்பட வேண்டியிருக்கும். இரவு நேரங்களில் தூக்கம் வருவது கடினமாக இருக்கும். கூடியவரையில், தூக்க மாத்திரை போட்டுக்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. அதற்குப் பதில், உறங்கப் போகும் முன், பாலின் சிறிது கசகசாவை கலந்து சூடாக்கிப் பருகுவதுஇயற்கையாகவே தூக்கம் ஏற்படுவதற்கு உதவும். பின்விளைவு ஏதுமில்லை!
அறிவுரை: மனதை நிம்மதியாக வைத்துக் கொள்ளுங்கள். ஏழரைச் சனி என்றாலே, ஆபத்து என்ற கற்பனையான அச்சத்தை விலக்கிவிடுங்கள். ஏழரைச் சனிக் காலத்தில், மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகளையும் ஆராய்ந்து பார்த்தே பலன்களைக் கூறவேண்டும் எனக் கூறுகிறது “பிருஹத் ஸம்ஹிதை” என்னும் மிகப் பழைமையான ஜோதிட கிரந்தம்.
பரிகாரம்: சனிக்கிழமைதோறும் வீட்டின் பூஜையறையிலோ அல்லது அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிலோ ஐந்து மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் தீபம்ஏற்றி வந்தால் அற்புத பலன் கிடைக்கும்.