பசுபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான ஃபிஜியில், சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
6.5 ரிச்டர் அளவிலான இந்த நிலநடுக்கம், பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 174 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம், இன்று (14) உள்ளூர் நேரப்படி காலை 8.00 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.