மத்திய மலைப் பகுதிகளைத் தவிர, நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று (15) வெப்பநிலை அதிகமாக
இருக்கும் என்று, வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இளம் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் வெப்பமான வானிலை தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று, மையத்தின் முன்னறிவிப்பு அதிகாரி மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, வெப்பக் குறியீடு - மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை - இன்று பல பகுதிகளில் 'எச்சரிக்கை' நிலைக்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"வெப்ப குறியீட்டு முன்னறிவிப்பு ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது. மேலும், இது உங்கள் உடல் எப்படி உணர்கிறது" என்று வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சூரிய ஒளியில் நீண்ட நேரம் நின்றிருப்பது மற்றும் வெளிப்புற செயல்பாடுகளில் ஈடுபடும்போது சோர்வை ஏற்படுத்தும் என்றும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது வெப்ப சோர்வுக்கு வழிவகுக்கும் என்றும் மையம் குறிப்பிட்டது.
வெளியில் பயணம் செய்யும்போது தளர்வான ஆடைகளை அணியவும், அடிக்கடி திரவங்களை குடிக்கவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.