நாளைய தினம் தமிழ் புத்தாண்டு பிறக்கவிருக்கிறது. இந்த வருடத்திற்கு விசுவாவசு வருடம்
என்று பெயர். பஞ்சாங்கத்தின்படி இந்த தமிழ் வருட பிறப்பை பார்த்தால் மிக மிக நல்ல வருடம் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த தமிழ் வருடப்பிறப்பில் நமக்கு ஆதாயங்கள் அதிகமாக கிடைக்கும், செல்வ செழிப்பு உயரும், லாபங்கள் உயரும், என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இந்த வருடம் எந்த விஷயத்தில் கவனம் தேவை என்றால் உங்களுடைய பிள்ளைகளுடைய ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் இந்த வருடம் மழை பொழிவும் அதிகமாக இருக்கும். விவசாயம் சிறக்கும், பசுக்கள் எல்லாம் நல்லபடியாக சீரும் சிறப்புமாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
ஆகவே இந்த வருட பிறப்பு நமக்கு மங்களத்தை உண்டு பண்ணும் வருடப்பிறப்பு என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. நாளை பிறக்க இருக்கும் வருட பிறப்பின் சிறப்பு என்ன, நாளை முதல் இந்த உலகம் நீங்கள் சொல்லக் கூடிய பேச்சைக் கேட்க வேண்டும் நல்லது எல்லாம் உங்கள் வசமாக வேண்டும் என்றால், நாம் அனைவரும் நாளைய தினம் சொல்ல வேண்டிய ஒரு வரி மந்திரம் என்ன, ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர் படித்து தெரிந்து கொள்வோமா. தமிழ் வருட பிறப்பு 2025 இந்த வருட பிறப்பானது சுவாதி நட்சத்திரத்தில் பிறக்க இருப்பதால் சிறப்பு வாய்ந்த வருட பிறப்பாக கருதப்படுகிறது. இந்த ஸ்வாதி நட்சத்திரம் நரசிம்மரது நட்சத்திரம். ஆக நாளைய தினம் எல்லோரும் நரசிம்மர் வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். பிறகு கனி காணுதல். நாம் எல்லோருக்கும் தெரியும்.
இரவே ஒரு தாம்பூல தட்டில் அழகாக பழங்கள் தங்க நகைகள், பணம் பூ இது போல மங்களப் பொருட்களை அடுக்கி வைத்து விட்டு, அதன் முன்பு ஒரு கண்ணாடி வைத்து தயார் செய்துவிட்டு, வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் தமிழ் புத்தாண்டு அன்று காலையில் எழுந்தவுடன் இந்த மங்களகரமான அலங்கரிக்கப்பட்ட தட்டில் கண் விழிக்க வேண்டும். இது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும் அல்லவா. இதையும் பின்பற்றிக் கொள்ளுங்கள்.
நாளைய தினம் நம் கட்டாயம் செய்ய வேண்டிய ஒரு விஷயம் பஞ்சாங்கத்தை படிக்க வேண்டும். பஞ்ச அங்கங்கள் சேர்ந்ததுதான் பஞ்சாங்கம். இதற்காக பஞ்சாங்கம் பணம் கொடுத்து வாங்க வேண்டுமா என்றெல்லாம் சிரமப்படத் தேவையில்லை. உங்களுடைய கைபேசியில் இன்றைய பஞ்சாங்கம் என்று போட்டாலே, இன்றைய பஞ்சாங்கம் வந்துவிடும். அதில் இருக்கும் திதி, கரணம், யோகம், வாரம், நட்சத்திரம் இந்த ஐந்தும் சேர்ந்ததுதான் பஞ்ச அங்கம். இதைத்தான் பஞ்சாங்கம் என்று சொல்கிறார்கள்.
இன்றைய நாள் என்ன, இன்றைய திதி என்ன, இன்றைய யோகம் என்ன, காரணம் என்ன, நட்சத்திரம் என்ன என்பதை படித்துவிட்டு பூஜையை மனதார செய்து அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் அனைவருக்கும் சந்தோஷம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனையை செய்து முடித்துவிட்டு பூஜையை நிறைவடைய செய்து பின்பு, உங்களுடைய வேலையை தொடங்கி விடுங்கள்.
தமிழ் வருடப்பிறப்பு மந்திரம்
சரி சரி இந்த பூஜையில் கட்டாயம் நாம் படிக்க வேண்டிய மந்திரம் என்ன இன்னும் சொல்லவில்லையே. வழக்கம் போல பூஜையே முடித்துவிட்டு நமஸ்காரம் செய்து கொண்டு பூஜை அறையில் இருந்து விபூதியோ அல்லது குங்குமமோ எடுத்து நெற்றியில் வைத்துக் கொள்ளும் போது, “சர்வ லோக வசீகரா ஸ்வாஹா!” என்ற மந்திரத்தை சொல்லுங்கள்.
புஷ்பங்களை எல்லாம் இறைவனுக்கு சமர்ப்பணம் செய்யும்போது இந்த ஒரு வரி மந்திரத்தை சொல்லாம். பூஜையை நிறைவடைந்த பிறகும் இந்த மந்திரத்தை சொல்லலாம். எப்போது சொன்னாலும் தவறு கிடையாது. தீய சக்திகளும் திருஷ்டி தோஷங்களும் விலக இந்த உலகமே உங்களுக்கு வசியம் ஆகிவிடும். இந்த மந்திரத்தை இன்று மட்டும் தான் சொல்ல வேண்டுமா. நிச்சயம் கிடையாது. இன்று முதல் துவங்கி நாள்தோறும் நெற்றியில் விபூதி குங்குமம் சந்தனம் இட்டுக் கொள்ளும் போது, இந்த மந்திரத்தை சொல்ல இந்த உலகம் உங்களுக்கு வசியம் ஆகும்.
இந்த வருடம் முழுவதும் நன்மை நடக்கும் என்றால் இந்த ஒரு வரி மந்திரத்தை இன்று முதல் படிப்பதாக உறுதி முடியும் எடுத்துக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் இந்த தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
-தெய்வீகம்