தான் படித்த பாடசாலையின் சிரேஷ்ட மாணவர்கள் குழுவால், இரக்கமற்ற முறையில் தாக்கப்பட்டு,

குருநாகல் பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கிட்டத்தட்ட 7 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த மாணவன் தொடர்பான செய்திகள், தற்போது வைரலாகியுள்ளன. குருநாகல் - ரிதீகம - வெலகெதர - ஷகரலியவத்த பகுதியிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.

உயிரிழந்தவர், குருநாகல் - புலுவல மகா வித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி கற்ற திலின விராஜ் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 16ஆம் திகதி வெலேகெதர - ரிதிகம - அன்ஹந்திய பிரதேசத்தில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.

இந்த வருடம் சாதாரண தரப் பரீட்சை எழுதும் அதே பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் குழுவொன்றும், வெளியாட்கள் குழுவொன்றும், தனிப்பட்ட தகராறின் அடிப்படையில் திலின செல்லும் வழியில் காத்திருந்து அவரைத் தாக்கியுள்ளனர்.

பாதுகாப்புத் தலைக்கவசத்தால் (ஹெல்மெட்) மாணவனின் தலையில் கடுமையாகத் தாக்கியுள்ள அவர்கள், அம்மாணவன் மயக்கமடைந்ததை விட்டுச் சென்றுள்ளனர். இதனையடுத்து, மாவதகம ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அம்மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவன், நேற்று உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து தகவல் வெளியானதை அடுத்து, வெளிநாட்டில் இருந்த திலினவின் தாயார் வீடு திரும்பியுள்ளார். மாணவர் மீதான தாக்குதல் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவனைத் தாக்கிய அனைத்து சந்தேகநபர்களையும் கைது செய்யக்கோரி, ஷகரலிவத்த பகுதி மக்கள், இன்று குருநாகல் - வெலகெதர பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடி போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web