அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில், 4.6 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் கடற்கரையோரப் பகுதிகளான தாரி முதல் சிட்னி மற்றும் வொல்லொங்காங் வரை நிலநடுக்கம் உணரப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், நிலநடுக்கத்தால் இதுவரை எந்தச் சொத்துச் சேதமோ அல்லது உயிர்ச் சேதமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.