துருக்கியின் இஸ்தான்புல் நகரில் 6.2 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் உட்பட தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
கட்டிடங்கள் குலுங்கியதாகவும், மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது சிலர் அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் உயரமான இடங்களில் இருந்து குதித்ததால் சுமார் 151 பேர் காயமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் சொத்து சேதம் இன்னும் கணக்கிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் 6.92 கிலோமீற்றர் (4.3 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக துருக்கியின் அவசர சேவைகள் தெரிவித்தன.
நிலநடுக்கம் காரணமாக ஏராளமான மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். மேலும் பலர், மற்றொரு வலுவான நிலநடுக்கத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வெளியில் இரவைக் கழிக்கத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.