அஹ்னஃப் ஜஸீமை உடனடியாக விடுதலை செய்க! ஐரோப்பிய நாடுகள் கோரிக்கை
ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவிஞர் அஹ்னஃப் ஜஸீமை உடனடியாக விடுவிக்குமாறு ஐரோப்பிய நாடுகளின் குழு கேட்டுள்ளது
ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவிஞர் அஹ்னஃப் ஜஸீமை உடனடியாக விடுவிக்குமாறு ஐரோப்பிய நாடுகளின் குழு கேட்டுள்ளது
கொழும்பின் பிரபல்யமான இடங்களிலுள்ள நிலப்பரப்புகளை விற்பனை செய்யும் செயல் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தின் ஆக்ராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் ஒக்சிஜன் தட்டுப்பாடு நிலவிய காலத்தில், ஒக்சிஜனின்றி எவ்வளவு நோயாளிகள் தாக்குப்பிடிப்பார்கள் என்பதை அறிய சோதனை நடத்தியதாக அதன் உரிமையாளர் பேசியதாக வெளியான காணொளி சர்ச்சையாகியிருக்கிறது.
கொவிட்- 19 நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த கடலுணவு வியாபாரி ஒருவர், வாகன குத்தகைக் கட்டணத்தை செலுத்த முடியாமல் நிதி நிறுவன உத்தியோகத்தர்களின் நெருக்கடி காரணமாக தனது உயிரை மாய்த்துள்ளார்.
இலங்கையில் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்து கூறிய கருத்துகள் தொடர்பாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத்திடம் பகிரங்க மன்னிப்பு கோருமாறு ஆறு ஊடக அமைப்புகள் கோரியுள்ளன.சுகா
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் ரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.தீ விபத்து ஏற்பட்டபோது 37 பேர் தொழிற்சாலையில் பணியில் இருந்தனர்.. இதுவரை 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உள்ளே சிக்கியுள்ளவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருகின்றனர்.
முகக்கவசம் இல்லாமல் பாதையில் இருந்ததற்காக,தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவர் ஜீப் வண்டியிலிருந்து விழுந்து இறந்துள்ளமை தொடர்பில் பாணந்துரை வடக்கு பொலிஸில் துணை பொலிஸ் பரிசோதகர் ஒருவரும், பொலிஸ் சார்ஜன் ஒருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை ஆபிரிக்க நாடான நைஜீரியா தடை செய்துள்ளது.ட்விட்டர் நிறுவனம் தங்கள் நாட்டு விதிகளை மீறியதாக அந்நாட்டு ஜனாதிபதி முகம்மது புஹாரி குற்றம் சாட்டியிருந்த நிலையில் தற்போது அந்த வலைதளத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து எந்த தீர்மானமும் இதுவரை எட்டப்படவில்லை என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணி தாய்மார்களுக்கு சினோர்ஃபாம் தடுப்பூசி செலுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இலங்கையின் சுகாதார அமைச்சு இந்த பரிந்துரையை வழங்கியுள்ளதாக சுகாதார சேவைகள் துணை பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
இந்திய அரசின் பிரதிநிதியாக லட்சத்தீவில் நிர்வாகியாக இருக்கும் பிரஃபுல் படேல் எடுக்கும் நடவடிக்கைகள் கவலையளிப்பதாக பிரதமர் மோதிக்கு ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். 'பெருநிறுவனங்களின் வளர்ச்சிக்குத் துணை போவதாகவும் உள்ளூர் மக்களை அவர்களுடைய நிலத்தில் இருந்து விரட்டக் கூடிய வகையிலும் அவருடைய செயல்கள் உள்ளன' எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாடாளுமன்றம் இந்த வாரம் ஒரு நாள் மட்டும் கூட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஜெரூசத்தில் அல் ஜசீரா செய்தி ஊடகத்தின் பெண் நிருபர் உட்பட 2 பேரை இஸ்ரேல் பொலிஸார் கைது செய்து நீண்ட நேரத்தின் பின் விடுவித்துள்ளனர்.
ஒலுவில் மீன்பிடி துறைமுகம் பலவருடங்களாக உட்புகும் வழி, மண்ணால் மூடப்பட்ட நிலையில் காணப்படுவதனால் ஆழ்கடல் மீனவர்கள் அவர்களது குடும்பங்கள் மற்றும் ஏனைய தங்கிவாழும் பல குடும்பங்களும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். சுமார் 265 பெரிய படகுகள் காணப்படுவதுடன் 100 க்கும் கூடுதலான எண்ணிக்கையில் சிறிய படகுகளும் காணப்படுகிறது.
சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.