முகக்கவசம் இல்லாமல் பாதையில் இருந்ததற்காக,தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவர் ஜீப் வண்டியிலிருந்து விழுந்து இறந்துள்ளமை தொடர்பில் பாணந்துரை வடக்கு பொலிஸில் துணை பொலிஸ் பரிசோதகர் ஒருவரும், பொலிஸ் சார்ஜன் ஒருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

பாணந்துரை வாழைத்தோட்டம் வத்தல்பொல பகுதியில் வசித்து வந்த 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு இறந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன கூறுகிறார்.

நேற்று (06) காலை 9.00 மணியளவில் இந்நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரை பொலிஸ் நடமாடும் வாகனத்தில் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் பின் கதவை திறந்து வாகனத்திலிருந்து பாய்ந்ததால் அவர் காயமடைந்ததாக பொலிஸார் கூறுகின்றனர். சந்தேக நபரை வைத்தியசாலையில் அனுமதித்ததன் பின்பு நீதிமன்றத்தில் அவருக்கு பிணை வழங்கிக் கொடுத்ததாகவும் மாலை 6.30 மணியளவில் அவர் இறந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

ஒரு சந்தேக நபரின் பாதுகாப்பு சம்பந்தமாக அவரை கைது செய்த அதிகாரிகள் சரியான வழிமுறையை பின்பற்றியிருக்கவில்லை என்பது தெரிய வருவதால், அந்த சந்தேக நபரை கைது செய்த பொலிஸ் அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.

 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி