ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவிஞர் அஹ்னஃப் ஜஸீமை உடனடியாக விடுவிக்குமாறு ஐரோப்பிய நாடுகளின் குழு கேட்டுள்ளது

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கவிஞரும் ஆசிரியருமான அஹ்னஃப் ஜஸீமை விடுதலை செய்யுமாறு கடந்த மாதம் பல சர்வதேச மனித உரிமை அமைப்புகள் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகுக்கும் ஒன்பது நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் இந்த கோரிக்கையை விடுத்தனர்.

"ஜஸீமை உடனடியாக விடுவிக்க வேண்டும், அல்லது ஒரு விரைவான விசாரணையை முன்னெடுக்க வேண்டும், சர்வதேச மனித உரிமை தரங்களுக்கு இணங்க குற்றச்சாட்டுக்கள் விரைவாக தாக்கல் செய்யப்படுவதை உறுதி செய்வதற்கும் பல மனித உரிமை அமைப்புகள் கோரிக்க விடுப்பதாக" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் அஹ்னஃப் ஜசீம் கைது செய்யப்பட்டுள்ளார், இது குற்றமற்ற அல்லது வழக்குத் தொடராமல் அப்பாவி மக்களை 18 மாதங்கள் வரை தன்னிச்சையாக தடுத்து வைக்க அனுமதிக்கிறது.

"பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மேலும் தாமதமின்றி மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான எந்தவொரு சட்டங்களும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களுக்கான அரசின் உறுதிப்பாட்டுடன் முழுமையாக இணங்க வேண்டும்" என்று பிரிட்டன், எஸ்டோனியா, ஸ்பெயின் மற்றும் பின்லாந்து பிரான்ஸ், ஜெர்மனி, லக்சம்பர்க், நெதர்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் மனித உரிமைகளுக்கான தூதுவர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அஹ்னப் ஜஸீமின் விடுதலையை ஆதரித்து கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச மனித உரிமைகள் குழு, இலங்கையின் இன மற்றும் மத சிறுபான்மையினருக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்பட்டதாகவும், தமிழர்களும் முஸ்லிம்களும் இந்தச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதில் பென் இன்டர்நேஷனல் (PEN), அம்னஸ்டி இன்டர்நேஷனல் (AI), அமைதி மற்றும் நீதிக்கான இலங்கை இயக்கம் (SLC), இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் (JDS), இலங்கையின் செயற்பாட்டாளர் அமைப்பு (IWG) மற்றும் இலங்கை சர்வதேச நிறுவனங்களும் கையெழுத்திட்டன. நீதிக்கான திட்டம் (IDJP), நீதி மற்றும் பொறுப்புக்கூறல் மையம் (CJA), அவுஸ்திரேலிய சர்வதேச நீதி மையம் (ACIJ), பிரிவு 19, மனித உரிமைகள் கண்காணிப்பு, Article 19, PEARL மற்றும் Freemuse ஆகிய அமைப்புகள் ஒப்பமிட்டுள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி