கர்ப்பிணி தாய்மார்களுக்கு சினோர்ஃபாம் தடுப்பூசி செலுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இலங்கையின் சுகாதார அமைச்சு இந்த பரிந்துரையை வழங்கியுள்ளதாக சுகாதார சேவைகள் துணை பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதன்படி கர்ப்பிணிகளுக்கு சினொர்பாம் தடுப்பூசி செலுத்தும் செயல்பாடு எதிர்வரும் 9 ஆம் திகதி பிலியந்தலை பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே சினொர்பாம் தடுப்பூசி செலுத்தலின் போது கர்ப்பிணி தாய்மாருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இராணுவ தளபதி கூறியிருந்த போதும் சுகாதார அமைச்சு தமது பரிந்துரையை வழங்கியிருக்கவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி