சிறீ லங்கா சுதந்திரக்கட்சி விமலுடன் தனி மே தின பேரணிக்கு தயாராகிறது!
சிறீ லங்கா சுதந்திரக் கட்சி உட்பட 11 அரச பங்காளிக் கட்சிகள் தனி மே தின பேரணியை நடத்த முடிவு செய்துள்ளனர்.கடந்த வியாழக்கிழமை (01) மாலை நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸின் ரொஸ்மீட் பிளேஸில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்ற 11 கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.