அமேசான் நிறுவனத்தின் வெப் சேவர்கள் (வலை வழங்கி) இயங்கும் தரவுகள் மையத்தை குண்டு வைத்துத் தகர்க்கச் சதி செய்ததாக 28 வயதான சேத் ஆரோன் பென்ட்லே என்பவரைக் கைது செய்திருக்கிறது அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பு.

உலகில் முதல் பெண் பிரதமரை தெரிவு செய்த நாடு என்ற பெருமையைக் கொண்டு பிரபலமடைந்த இலங்கை இன்று திருமதி உலக அழகி மற்றும் திருமதி இலங்கை அழகிகளால் நகைப்பிற்குள்ளாகும் வகையில் பிரபலமடைந்திருக்கிறது எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்னாண்டோ இந்த சம்பவத்திலும் முழுமையான அரசியல் தலையீடு காணப்படுவதாக புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பாக அரசாங்கத்தில் உள்ள கட்சிகளின் வதந்திகளில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் பெயர் முன்னுக்கு வந்துள்ளதாக சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொற்றுநோய் அச்சுறுத்தலின்போது தொழிலாளர்களை ஆபத்தில் ஆழ்த்திய பிராண்டிக்ஸுக்கு கடன் வழங்கப்படுமாயின், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நிபந்தனைகளை விதிக்குமாறு உலக வங்கி விடுத்த வேண்டுகோளுக்கு சாதகமானபதில் கிடைத்துள்ளதாக தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

வருகிற நாட்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் புதிய அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது குறித்து அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளது.

மே மாதம் முதலாவது அமர்வில் தான், ரஞ்சன் ராமநாயக்கவுக்காக அரசியல் தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, தான் அரசாங்கத்துக்கு சவால் விடுப்பதாகவும் அரசாங்கம் அதனை நிறை​வேற்றினால் தான் மீண்டும் இந்த நாட்டு மக்களுக்கு தனது முதுகெலும்பை காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநில தேர்தல் பிரச்சாரத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எழுந்த புகாரில் சிக்கியுள்ள அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜிக்கு 24 மணி நேரம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

புனித ரமழான் மாத தலைபிறையைத் தீர்மானிக்கும் மாநாடு, இன்று(12) திங்கட்கிழமை மாலை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து, கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறுமென பிறைக்குழு அறிவித்துள்ளது.

சீனாவின் மூத்த நோய் கட்டுப்பாட்டு அதிகாரிகளில் ஒருவர், சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறன் குறைவாக இருப்பதாக கூறியுள்ளார். அரிதிலும் அரிதாக சீனா தன் பலவீனத்தை ஒப்புக் கொள்வது போல அமைந்திருக்கிறது.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின்போது வடக்கு மாகாணத்தைப் பிரதி நிதித்துவம் செய்யும் முதலமைச்சர் வேட்பாளராக யாழ் மாநகர சபையின் தற்போதைய மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் களமிறக்கப்படவுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கசிந்துள்ளன.

சத்தீஸ்கர் மாநிலம், தந்தேவடாவில் துப்பாக்கிச் சண்டையில் ஒரு மாவோயிஸ்டை கொன்றுவிட்டதாக பொலிசார் கூறுகின்றனர். அதே நேரம், பிஜப்பூரில் ஒரு தண்ணீர் சுத்திகரிக்கும் ஆலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 5 வாகனங்கள் மாவோயிஸ்டுகள் என்று சந்தேகிக்கப்படுவோரால் கொளுத்தப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

வெவ்வேறு வெளியீடுகள் மூலம் சமூக ஊடகங்களில் இது வரை வெளிவராத பல விடயங்ளை வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர் ஹிமாஷி கருணாரத்னா தனது புதிய வலைத்தளமான colomboplus.com நேற்று (10) அறிமுகப்படுத்தியுள்ளார்.

பிள்ளையான் "மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரா" அல்லது "மாவட்ட அழிவுக் குழுத் தலைவராக"  நியமிக்கப்பட்டாரா என்று எனக்கு சில நேரங்களில் ஆச்சரியமாக இருக்கிறது. என்று இரா.சாணக்கியன் தனது டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.

பண்டுவஸ்னுவர கூட்டுறவு சங்கத்திற்கு இரண்டு புதிய பணிப்பாளர்களை நியமிக்கும் தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அரசு சார்பு இணையத்தளம் 'லங்கா சி நியூஸ்' தெரிவித்துள்ளது.

தொல்லியல் பிரச்சினை என்பது எம்மிடையே இருக்கின்ற மிக முக்கியமான பிரச்சினை.தொல்லியல் நிபுணர் ஒருவரின் கருத்துப்படி சிகிரியா பிரதேசத்தில் 500க்கும் மேற்பட்ட அரபு மட்பாண்ட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எஸ்.எம். முஷர்ரப் முதுநபீன் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி