கல்வியின் இராணுவமயமாக்கலுக்கு எதிராக தலைநகரில் போராட்டங்களை நடத்திய தன்னையும் மற்றவர்களையும், தடுத்து வைத்திருப்பதை உறுதிப்படுத்தும் உத்தியோகபூர்வ ஆவணத்தை வெளிப்படுத்துமாறு, விமானப்படை தளத்தில் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர், துறைக்குப் பொறுப்பான அமைச்சரிடம் சவால் விடுத்துள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான ஜோசப் ஸ்டாலின், பிக்குகள் மற்றும் பெண்களை எவ்வாறு என்டிஜன் அல்லது பீசீஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தாது, தனிமைப்படுத்தலுக்கு அனுப்ப பொலிஸார் தீர்மானிக்க முடியும். பொலிஸார் அரசியலமைப்பையும், மனித உரிமைகளையும் மீறி நடந்துகொண்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறுதின திட்டத்தைத் வகுத்த பிரதான சூத்திரதாரிகளைக் காப்பாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களின் பின்னாலுள்ள முக்கிய சூத்திரதாரிகளைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தண்டனை வழங்கவேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை. தாக்குதல்களுக்கான திட்டத்தைத் வகுத்த பிரதான சூத்திரதாரிகளைக் காப்பாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

ஈராக்கில் கொரோனா ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 58 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈராக்கும் ஒன்று. அங்கு இதுவரை 14 லட்சத்து 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையத்தில் அரசுக்கு சொந்தமான 40 வீதமான பகுதியை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்தார்.

அம்பாறையில் புதிதாக 3 பொலிஸ் நிலையங்கள் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழக அரசின் பாடநூல் கழகத்தின் தலைவராக திமுக பேச்சாளரான திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்திற்கு அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அதிருப்தி தெரிவித்தனர். பொது மேடைகளில் பெண்களைப் பற்றிய அவதூறு கருத்துக்களை கூறிய ஒருவர் இதுபோன்ற பதவிக்கு வரக்கூடாது என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கருத்து கூறியிருந்தார்.

யூரோ கால்பந்து 2020 இறுதிப்போட்டியில் இங்கிலாந்து தோற்றதால் அந்த அணியின் நட்சத்திர வீரர் ஹாரி கேன் மனைவி கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்.

வடமாகாண ஆளுநராக மீண்டும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர்  நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி