leader eng

அரசியல் சாசனத்தினால் வழங்கப்பட்டுள்ள கருத்துச் சுதந்திர உரிமையையும், தான் கொண்டுள்ள கருத்தை நாட்டு மக்களுக்கு தெரிவிப்பதற்கான உரிமையையும் மீறி ஆர்ப்பாட்டத்தை நிறுத்த சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு எங்கிருந்து அதிகாரம் கிடைத்தது? இல்லாத அதிகாரத்தை செயற்படுத்தியமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவிருப்பதாக, பல்லேகலை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து முன்னிலை சோஷலிஸக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் நேற்று (8) ஊடகங்களிடம் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (07) கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் பலவந்தமாக தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அந்த தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து தொலைபேசி மூலம் கருத்து தெரிவித்த துமிந்த நாகமுவ, பல்வேறு காரணங்களைக் காட்டி, அடக்குமுறை பலத்தைக் கொண்டு,உரிமைகளுக்காக மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்களை அரசாங்கம நிறுத்துவதாகவும், இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாதெனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தற்போது கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் உட்பட சில தொழிற்சங்கத் தலைவர்களையும் அரசாங்கத்தின் உத்தரவை சிரம் தாழ்த்தி ஏற்ற பொலிஸார் கைது செய்துள்ளனர். எரிபொருள் விலை, உரம் சம்பந்தமான பிரச்சினை மற்றும் வேறு சில பிரச்சினைகளுக்காக வீதியிலிறங்குபவர்களின் வாய்களை மூடிவிட்டு தமக்கு அதிகாரம் வழங்கிய மக்களை அரசாங்கம் ஏமாற்றுகிறது.

கருத்துச் சுதந்திரம் எந்த அதிகாரமும் இல்லாதவர்களால் பறிக்கப்படுகிறது. அப்பாவி மக்கள் தமது பிரச்சினைகளுக்கு எப்போதாவது தீர்பு கிடைக்கும் வரை காத்திருக்கின்றனர். இவற்றைப் பார்க்கும் போது அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் தோற்றுப் போயுள்ளது தெரிகிறது.

இத்தருணத்தில், அடக்குமுறை பலததை பிரயோகித்து அப்பாவி மக்களை சுரண்டித் தின்பதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். மாத்திரமல்ல, தமது உரிமைகளுக்காக பயப்படாமல் பேசுங்கள், தமது உரிமைகளை பயன்படுத்துங்கள் என்று மக்களிடம் கூறுகிறோம்” எனவும் கூறினார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி