அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ‘எல்சா’ புயல் பாதிப்பால், 25 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அமெரிக்காவின் தென்கிழக்கு கடற்பகுதியில் கடந்த 2 ஆம் திகதி உருவான ‘எல்சா’ புயல், படிப்படியாக வலுவடைந்து கடந்த 5 ஆம் திகதி கியூபா தீவை தாக்கியது. இதனை தொடர்ந்து நேற்றைய தினம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள டைலர் கவுண்டி பகுதியில் கரையை கடந்தது.

இதன் காரணமாக புளோரிடா மாகாணத்தில் பல இடங்களில் பெரும் மழை வெள்ளம் ஏற்பட்டது. இந்த புயல் பாதிப்பால் ஏற்பட்ட சேதத்தில் சுமார் 25 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதை சீர்ப்படுத்த மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

இதற்கிடையில் ‘எல்சா’ புயலின் வேகம் படிப்படியாக வலுவிழந்து மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் ஜார்ஜியா மாகாணத்தை கடந்து சென்றது. அங்கு மேலும் வலுவிழந்து காற்றின் வேகம் மணிக்கு சுமார் 45 கி.மீ. என்ற அளவிற்கு குறைந்துள்ளது. ஜார்ஜியாவில் தற்போது மழைப்பொழிவு தொடர்ந்து வரும் நிலையில் தெற்கு கரோலினா மாகாணத்தை நோக்கி ‘எல்சா’ புயல் நகர்ந்து கொண்டிருக்கிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி