அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது கென்டக்கி மாகாணம்.  இந்த மாகாணத்தில் சுழல் காற்று தாக்கியதில் 50 பேர் உயிரிழந்து இருக்கலாம் என செய்திகள் வெளிவந்துள்ளன.  சுமார்  200 மைல் தூரத்திற்கு சூறாவளி போல சுழன்று அடித்த காற்று கடுமையான சேதத்தை ஏற்படுத்தி விட்டதாக கென்டக்கி மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.உயிரிழப்பு எண்ணிக்கை 100- வரை கூட இருக்கலாம் எனவும் அவர் அச்சம் தெரிவித்தார்.

வடக்கில் பல்வேறான கடற்கரையோரங்களில் சடலங்கள் கரையொதுங்குகின்றன. இந்த சடலங்கள் தொடர்பில் பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளனவென சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், இராணுவத்திடம் சரணடைந்தவர்களா? இவ்வாறு சடலங்களாக கரையொதுங்குகின்றனர் என்றும் கேள்வியெழுப்பினார்.

அரசாங்கம் பதவிக்கு வருவதற்காக பயன்படுத்திய மூலோபாய செயற்பாடுகள் தற்போது அரசாங்கத்திற்கே வினையாக மாறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake) தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட சுமார் 60 மில்லியன் பெறுமதியுடைய Toyota Land Crusher 300 அதிநவீன வாகனம் ஒன்று வந்திறங்கியுள்ளது.இலங்கையில் வாகனங்கள் இறக்குமதிக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அதிநவீன வாகனம் எவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது.

இஸ்லாத்தையும் எல்லாம் வல்ல அல்லாஹ்வையும் அவமதித்து குற்றஞ்சாட்டப்பட்ட ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் சட்டமா அதிபரின் ஆலோசனையின் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் பாகிஸ்தானில் வைத்து கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.

இந்நாட்டுக்குத் தேவைப்படும் எரிபொருள் உற்பத்திற்கு அவசியமான மசகு எண்ணெயை வரவழைப்பதற்கு டொலர் இல்லாமையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குத் தீர்வாக இலங்கை ரூபாவில் பணம் பெற்றுக்கொள்ள விரும்பும் வழங்குநர்களை தேடிக் கொண்டிருப்பதாக எரிபொருள் அமைச்சர் உதய கம்மன்பில கூறுகிறார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிரோடு இல்லாமல் இருந்தால் பகிரங்கமாக அரசாங்கம் மன்னிப்பை கோரவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

எரிவாயு சிலிண்டர்களின் தரம் சம்பந்தமான பிரச்சினைகளும், அதனால் ஏற்படும் விபத்துக்களும் அதிகரித்த கையோடு பாவனையாளர் அதிகார சபை தலையிட்டு லேபலொன்றை அறிமுகப்படுத்தியமையானது எரிவாயு நிறுவனங்களின் இலாபத்தை மறைக்கும் உபாயமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.

workytamil 2

worky tamil

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி