காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிரோடு இல்லாமல் இருந்தால் பகிரங்கமாக அரசாங்கம் மன்னிப்பை கோரவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் காணாமல் போன உறவினர்களால் இன்று மேற்கொள்ளப்பட்ட தீப்பந்த போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கபட்டு இருக்கும் உறவுகள் இன்றைக்கு நூற்றுக்கணக்கானவர்கள் தங்களுடைய உறவினர்களை இழந்திருக்கின்றார்கள் ஆகவே அரசாங்கம் காலம் கடத்தி சாட்சியங்களை அழிக்காமல் மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிரோடு இல்லாமல் இருந்தால் பகிரங்கமாக அரசாங்கம் மன்னிப்பை கோரவேண்டும் அதற்கு அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதற்கான ஒரு நிலமைக்கு செல்வதற்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு ஒரு முழுமையான ஒரு அழுத்தத்தை கொடுக்க வேண்டும் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில், மக்கள் தங்களுடைய உறவினர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த 12 வருடகாலத்திலே போரால் பாதிக்கப்பட்டு இருக்ககூடிய காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகள், நில அபகரிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு இந்த 12 வருடகாலமும் இவ் மனித உரிமை பேரவைக்குள் எந்த ஒரு தீர்வும் காணமுடியாத நிலையில்தான் தள்ளப்பட்டு இருக்கின்றது.

ஆகவே தமிழ் மக்கள் நீண்டகாலமாக தமக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த மனித உரிமை பேரவையில் எதிர்பார்த்திருந்தது ஏமாற்றமாக இருக்கின்றது.

அதுமட்டுமல்லாமல் தமிழ் மக்களுடைய இந்த பிரச்சினையை வெறுமனமே சிறுபான்மைகுழுக்கள் என்று இந்த மேற்குலக நாடுகள் அதற்கு குறுகிய வட்டத்திற்குள் இதை நோக்குகின்ற நிலமை இருக்கின்றது.

அது தொடர்ந்து நீடிக்கப்படாமல் இருக்க வேண்டுமாக இருந்தால் சர்வதேச சமூகம் இந்த போர் பாதிப்பால் ஏற்பட்டு இருக்கின்ற அத்தனை பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு காண்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு கடுமையான ஒரு அளுத்தத்தை பிரயோகிப்பதற்கான ஒரு காலகட்டம் வந்திருக்கின்றது எனவும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.          

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி