எரிவாயு சிலிண்டர்களின் தரம் சம்பந்தமான பிரச்சினைகளும், அதனால் ஏற்படும் விபத்துக்களும் அதிகரித்த கையோடு பாவனையாளர் அதிகார சபை தலையிட்டு லேபலொன்றை அறிமுகப்படுத்தியமையானது எரிவாயு நிறுவனங்களின் இலாபத்தை மறைக்கும் உபாயமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சுமார் ஒருமாத காலமாக எரிவாயு சிலிண்டர் விபத்துகளோடு சம்பந்தப்பட்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களும் இந்த புதிய லேபலை கொண்டிருப்பதாக பாவனையாளர்கள் கூறியுள்ளனர்.

மாத்திரமல்ல புதிய லேபல் ஒட்டப்பட்டு சந்தைக்கு விடப்பட்டிருந்த லிட்ரோ சிலிண்டர்களின் லேபலுக்குகு கீழ் பழைய லேபலும் காணப்பட்டமையால் பழைய சிலிண்டர்களில் லேபலின் மேல் புதிய லேபர் ஒட்டப்பட்டிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

என்றாலும், எரிவாயு பாவனையாளர்களின் நம்பிக்கையை மீண்டும் பெற்றுக் கொள்வதற்காக இழிவான வியாபார உபாயங்களை பயன்படுத்தி அவர்களை ஆபத்தில்; தள்ளுவது சம்பந்தமாக சட்ட நடவடிக்கை எடுக்காமல் அரசாங்கம் குற்றத்தை ஏற்று கை கழுவிக் கொள்வது பாவனையாளர் ராஜாங்க அமைச்சரின் கூற்றிலிருந்து தெரிகிறது.

எரிவாயு நிறுவனங்கள் இதுவரை

ற்கொண்ட எந்த மாற்றமும் பாவனையாளர்களை பாதுகாப்பதற்காக மேற்கொண்ட மாற்றங்கள் அல்ல என்பது தெரிகிறது. இந்த விடயத்தில் அரசாங்கம் எரிவாயு நிறுவனங்களில் இலாபத்தை பாதுகாக்க முயற்சிக்கிறதா அல்லது பாவனையாளர்களை எரிவாயு விபத்துக்களிலிருந்து பாதுகாக்க முயற்சிக்கிறதா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி